நேர்கொண்ட பார்வை நான் ஸ்டாப் வசூல் வேட்டை - அஜித் புதிய சாதனை..!


சமீபத்தில் திரைக்கு வந்து பெரும் வரவேற்ப்பை பெற்ற நேர்கொண்ட பார்வை படம் ஒரு விவாதத்தையும் முன்னெடுத்துள்ளது. 

பெண் விலைமாதுவாகவோ, பல ஆண்களுடன் படுக்கையை பகிர்ந்த பெண்ணாகவோ, தோழியாகவே, காதலியாகவோ, ஏன் மனைவியாக இருந்தாலும் அவர் நோ என்று சொன்னால் நோ என்றே பொருள் என்பது படத்தின் மையக்கருத்து.


இந்த படத்தை முற்போக்கு சிந்தனை என ஒரு தரப்பினரும், கலாசார சீரழிவு என ஒரு தரப்பினரும் பேசி வருகிறார்கள். இது ஒரு புறம் இருக்க இந்த படம் ஒருப்பக்கம்நான் ஸ்டாப் வசூலை செய்து வருகின்றது. 


சென்னையில் மட்டும் இந்த படம் 12 நாட்களில் 9.88 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. 12-வது நாளான நேற்று மட்டும் 18.26 லட்ச ரூபாய் வசூலித்துள்ள நிலையில் இன்று சென்னையில் மட்டும் 10 கோடி வசூல் என்ற இலக்கை எட்டி புதிய சாதனை படைக்கும் என கூறுகிறார்கள்.
Blogger இயக்குவது.