நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அபிராமி வைத்த வேண்டுகோள் - பாடம் புகட்டிய அஜித்..!


பிரபல விளம்பர பட நடிகை அபிராமி வெங்கடாசலம் நேர்கொண்ட பார்வை படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்தார். படம் முழுதும் பயணிக்கும் இந்த கதாபாத்திரம் மிகவும் அழுத்தமாக இருந்தது. 

ஆனால், படத்தில் நடித்து முடித்த அவர் படம் ரிலீஸ் ஆவதற்கு பிக்பாஸ் சீசன் 3 போட்டியில் கலந்து கொண்டார். ஆரம்பத்தில் இவர் மீது ரசிகர்கள் கடுமையாக கோபப்பட்டனர். வந்தவுடன் காதல் அது இது என்று இவரால் இருக்க முடிகிறது என்று விளாசினார்.

பிறகு உண்மை நிலவரத்தை அறிந்தவராக அடக்கி வாசித்தார். வெளியேறும் போது பெரிதாக எதிர்ப்புகள் எதையும் சம்பாதித்து கொள்ளாமல் சமத்து பெண்ணாக வெளியே வந்து விட்டார். 


வெளியே வந்ததும் நேர்கொண்ட பார்வை படத்தை திரையரங்கில் பார்த்தார் அபிராமி. இந்நிலையில், சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அபிராமி படப்பிடிப்பில் அஜித்துடன் நடித்த அனுபவங்கள் பற்றி பகிர்ந்து கொண்டார். அதில், நான் அஜித் சாரை எப்போதும் சார் சார் என்று தான் கூப்பிடுவேன். அவர் என்னையும் சக நடிகைகளையும் ஜி என்று தான் அழைப்பார். யாரையும், பேர் சொல்லி அழைக்க மாட்டார்.


ஒரு நாள் அவரிடம் சார் நீங்க என்னை ஜி என்று கூப்பிடாதீர்கள் அபிராமி என்றே கூப்பிடுங்கள் என்றேன் ஆனால், அஜித் எனக்கு கொடுத்த பதில் ஷாக்கிங்காக இருந்தது. சரி, நான் உங்களை ஜி என்று கூப்பிடவில்லை. நீங்கள் என்னை சார் என்று அழைக்காமல் அஜித் என்று அழைக்கமுடியுமா..?" என்று கூறினார்.

நிச்சயமாக என்னால் அவ்வளவு பெரிய நடிகரை பேர் சொல்லி அழைக்க முடியாது. இதன் மூலம், சிறியவரோ, பெரியவரோ, உரிமை இருந்தால் ஒழிய அவர்களை பேர் சொல்லி அழைக்க கூடாது. மரியாதையுடன் தான் அழைக்க வேண்டும் என்று பாடம் புகட்டியுள்ளார். அதனால் தான் என்னையும் ஜி என்று அழைத்துள்ளார். என்று கூறியுள்ளார் அபிராமி.
Blogger இயக்குவது.