எதனால் எனக்கு சேரன் மீது இவ்வளவு கோபம் - சித்தப்பு போட்டு உடைத்த உண்மை..! - சேரன் இவ்வளவு மோசமானவரா..?


சேரன் - சரவணன் சண்டைக்கு இது தான் காரணம் என்று நம்முடைய தளத்தில் இன்று மதியமே ஒரு காரணத்தை கூறியிருந்தோம். அது இப்போது உண்மையாகியுள்ளது. 

ஆம், 1999-ம் ஆண்டு கையில் பைசா காசு இல்லாமல் நடு ரோட்டில் நின்று கொண்டிருந்தேன். அப்போது அந்த வழியாக வந்த சேரன் என்னை பார்த்து பேசினார். அவர் கிளம்பும் போது உங்க படத்துல எதாவது வாய்ப்பு இருந்தா சொல்லுங்க என்று கேட்டேன். அதற்கு சேரன் என்ன கூறினார் தெரியுமா..?


நீங்கள் பார்க்காத உயரமா..? நீங்கள் பார்க்காத இயக்குனரா..? நீங்கள் எவ்வளவோ உயரம் சென்று விட்டீர்கள்..? உங்களுக்கு இனி எதற்கு நடிப்பு..? நீங்கள் எதை நோக்கி பயணப்பட போகிறீர்கள்.? என நக்கலாக பேசி விட்டு போனார். படத்தில் நடிக்க வாய்ப்பு இருந்தா பாக்குறேன் என்று சொல்லிவிட்டு போகணும். இல்லை என்றால் இல்லை என்று சொல்லிவிட்டு போகணும். அதை விட்டு விட்டு வெந்த புண்ணில் வேலை பாய்ச்சியது போல பேசிவிட்டு போனார்.


அதை நினைத்து நான் எவ்வளவு நொந்து போனேன் தெரியுமா..?? என்று வேதனையுடன் கூறினார் சரவணன். இப்போது தெரிகிறதா..? மொட்ட கடுதாசி டாஸ்கில் சேரனிடம் சரவணன் ஏன் " நீங்கள் எவ்வளவோ உயரம் அடைந்துவிட்டீர்கள்..? விருதுகளையும் வாங்கி விட்டீர்கள்..? சினிமாவில் நீங்கள் சம்பாதிக்க விஷ்யதையா..? இந்த பிக்பாஸ்-ல் சம்பாதித்து விட போகிறீர்கள்..? இது எதை நோக்கிய பயணம்..?" என கேள்வி கேட்டார் என்று.

இந்த கேள்விக்கு பதிலளித்த சேரன் நேரடியாக சரவனணை பார்த்தே பதில் கூறினார் என்பது கூடுதல் தகவல். ஏனென்றால், அவருக்கு தெரிந்திருகிறது. இவர் தான் இந்த கேள்வியை கேட்டிருக்க வேண்டும் என.
Powered by Blogger.