பொருள் சேதத்தில் ஈடுபட்ட முகென்-க்கு கிடைக்கவுள்ள தண்டனை..! - எத்தனை லட்சம் வரை என்று தெரியுமா..?
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் ஒரு நாள் போட்டியாளர் முகென் சக போட்டியளார் அபிராமியுடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் கட்டிலை உடைத்து சேதப்படுத்தினார்.
அது, நமுத்துப்போன ப்ளைவுட் தான் என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். ஆனால், பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருளை அவர் சேதப்படுத்தியுள்ளார். இதற்காக, அவருக்கு அபராதம் விதிக்கப்படும். எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்று முன்னாள் பிக்பாஸ் போட்டியாளர் டேனி ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறுகையில், பிக்பாஸ் வீட்டில் உள்ள பொருட்களை சேதப்படுத்த கூடாது. அப்படி சேதப்படுத்தினால் அவருக்கு அபராதம் உண்டு. அதனை சம்பளத்தில் இருந்து கழித்து கொள்வார்கள்.
குறைந்த பட்சம் 50,000 முதல் 50 லட்ச ரூபாய் வரை அபராதம் விதிக்கமுடியும் என்று கூறி அந்த அக்ரிமெண்டில் கையெழுத்து வாங்கிய பிறகு தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவோம்.
அதனால், முகெனுக்கு குறைந்த பட்சம் 50,000 ரூபாய் அபராதம் உறுதி என்று கூறியுள்ளார். எனில், இதுவரை ஏன் மதுமிதா யாருக்கும் பேட்டி கொடுக்காமல் இருக்கிறார் என்று கேட்டதற்கு, அதுவும் பிக்பாஸ் விதிகளில் ஒன்று. என்று கூறியுள்ளார்.