வாவ்..! - நேர்கொண்ட பார்வையில் இடம் பெற்ற இந்த காட்சி அஜித் இயக்கிதா..? - செம்ம செம்ம..! - இதோ புகைப்படம்


அஜித் நடிப்பில் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள நேர்கொண்ட பார்வை படம் கடந்த 8-ம் தேதி வெளியானது. இந்தியில் வெளியாகி ஹிட் அடித்த இந்தப் படம், தமிழிலும் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. 

அஜித் வழக்கறிஞராக நடித்துள்ள இந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்துள்ளார். பிங்க் படத்தின் கதைக்கருவை வைத்துக் கொண்டு தமிழில் சிலமாற்றங்களை செய்து ரசிகர்களை தன்வசப்படுத்தியுள்ளார் இயக்குநர் வினோத். 


கமர்ஷியல் அம்சங்கள் அதிகம் இல்லாத இந்தக் கதையில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் அஜித் நடித்திருப்பது திரைத்துறையை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பெண் சுதந்திரம், பெண்கள் மீதான இச்சமூகத்தின் பார்வையை திரையில் பேசிய அஜித்துக்கு பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளன. 


இந்நிலையில் இந்தப் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், அஜித்தை போனில் தொடர்பு கொண்டு பாராட்டியுள்ளார். இந்த படத்தில் இடம் பெற்ற "அகலாதே" என்ற பாடல் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்நிலையில், ரசிகர்களின் வேண்டுகோளுக்கினங்க அந்த பாடலின் வீடியோவை நேற்று தயாரிப்பாளர் போனி கபூர் வெளியிட்டார். இந்நிலையில், இந்த பாடல் குறித்த சுவாரஸ்யமான விஷயம் ஒன்று வெளியாகியுள்ளது. 

இந்த பாடலில் நடிகை வித்யாபாலன் தூணின் பின்னால் மறைந்து நின்று கொண்டு தன்னுடைய கர்பம் மட்டும் வெளியே தெரியும்படி நிற்க நடிகர் அஜித் அந்த உடலுக்கு ஏற்றார் போல தலையை வெளியே காட்டுவார். இந்த காட்சிக்கு திரையரங்களில் மிகப்பெரிய ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்த காட்சியை இயக்கியதே நம்ம தல அஜித்தானாம்.  


Blogger இயக்குவது.