அதை விஜய் சார் தான் சொல்லணும் - நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத் அதிரடி..!


மக்களுக்கான சினிமா எக்காலத்திலும் பேசப்படாமல் போனதில்லை. அந்த வகையில் நிகழ்காலத்தின் கண்ணாடியாக நாட்டு நடப்புகளை வெளிச்சம் போட்டு காட்டி, வெற்றிவாகை சூடியுயது "சதுரங்க வேட்டை". 

தனது முதல்பட இயக்கத்திலே சிகரம் தொட்ட இயக்குனர்களின் வரிசையில் இப்படத்தின் இயக்குனர் ஹெச்.வினோத் சேர்ந்தார். அடுத்து இயக்கிய, தீரன் அதிகாரம் ஒன்று படமும் ஹிட் அடித்தது. 


தொடர்ந்து, மூன்றாவது படமே தல அஜித்துடன் சேர்ந்தார். முதலில், அஜித்தை சந்திக்க சென்ற இவர் தனது சொந்த கதையை அஜித்திடம் கூறியுள்ளார். பதில் சொல்லாமல் அவரை அனுப்பி விட்ட அஜித் குமார் சில நாட்கள் கழித்து அலுவலத்திற்கு வருமாறு வினோத்தை அழைத்தார். 


பிங்க் படத்தை தமிழில் ரீமேக் செய்ய ஆசைப்படுகிறேன் அந்த படத்தை பண்ணி கொடுங்க அடுத்த படம் நீங்க சொன்ன கதையில பண்ணலாம் என்று கூறவே, சரி என்ன கூறிவிட்டார் வினோத். 

சொன்னது போல, நேர்கொண்ட பார்வை படமும் முடிந்து அடுத்த படத்திற்க்கான அறிவிப்பும் வந்து விட்டது. இதற்கிடையே இன்னொரு விஷயம் என்னவென்றால், இயக்குனர் வினோத் நடிகர் விஜய்யிடம் கூட ஒரு கதையை கூறியுள்ளார். இரண்டு மணி நேரம் கதை கேட்ட விஜய் பதில் எதுவும் கூறாமல் அனுப்பி விட்டாராம். 

இது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசிய வினோத்,கமர்சியல் கலந்த புதிய கதைஒன்றை விஜய் சார்கிட்ட சொல்லியிருக்கேன். கதை பிடித்திருக்கிறதா..? இல்லையா..? என்பதை விஜய் சார் தான் முடிவு பண்ணனும் என கூறியுள்ளார் வினோத்.
Blogger இயக்குவது.