நேர்கொண்ட பார்வை - தமிழ்நாடு முழுதும் மூன்று நாள் வசூல்..! - லேட்டஸ்ட் ரிப்போர்ட்..!


தல அஜித் எப்போதும் கிங் ஆப் ஓப்பனிங் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், அவர் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை ரிலிஸிற்கு முன்பே பல விவாதங்களை தொடங்கியது. 


இது அஜித் படமே இல்லை. அவர் கேமியோ ரோலில் தான் தோன்றியுள்ளார். பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள படம், அது இது என்று எல்லோரும் பேசி வந்தனர். ஆனால், படத்தின் வசூல் சொன்னவர்கள் எதிர்ப்பார்த்ததற்கு மேல் தான் உள்ளது. 


ஆம், நேர்கொண்ட பார்வை தமிழகத்தில் நேற்று வரை கொளுத்த வசூல் தான். 3-ம் நாள் சனிக்கிழமை நாளான நேற்று நேர்கொண்ட பார்வை படம் ரூ 10 கோடிகளுக்கு மேல் தமிழகத்தில் வசூல் செய்துள்ளது. 

இப்படம், மூன்று நாட்கள் முடிவில் 35 கோடி ரூபாய் வரை தமிழகத்தில் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகின்றது.மேலும், இன்று நான்காம் நாள்gஞாயிற்று கிழமை என்பதால் நிச்சயம் கடந்த மூன்று நாட்களை விட அதிகமாகவே இருக்கும் என எதிர்பார்க்கிறார்கள்.
Blogger இயக்குவது.