நேர்கொண்ட பார்வை விமர்சித்த விமர்சகருக்கு ஸ்ரத்தா ஸ்ரீநாத் நெத்தியடி பதில்..!


வேண்டாம் என்றால் வேண்டாம் தான் என்கிற கருத்தை பதிவு செய்த் பிங்க் திரைப்படம் பெற்ற அதே வரவேற்பை அதன் தமிழ் ரீமேக் நேர்கொண்ட பார்வை படமும் பெற்று வருகிறது. 

அதிலும் அஜித் போன்ற உச்ச நடிகர் ஒருவர் சொன்னாதால் இன்னும் ரீச் ஆகியுள்ளது. படம் வெளியாகி ஆறு நாட்கள் கடந்துள்ள நிலையில் ஒவ்வொரு நாளும் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான வசூலை சென்னையில் மட்டும் வசூல் செய்துள்ளது.


உலகம் முழுவதும் நல்ல வசூலும் குவித்து வருகிறது இந்த படம். ஆனால் ஒரு சிலர் இந்த படம் பற்றி வேறு விதமாகவும் விமர்சித்து வருகின்றனர். அப்படி ஒரு பிரபல விமர்சகர் NKP பற்றி மோசமாக விமர்சிக்க, அதை பார்த்த ரசிகர் ஒருவர் அந்த விமர்சகரை திட்டியுள்ளார். 


இதை ஸ்கிரீன்ஷாட் எடுத்து இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார் நடிகை ஷ்ரத்தா கபூர். நேர்கொண்ட பார்வை ரசிகர்களை எவ்வளவு கவர்ந்துள்ளது என்பதை காட்டத்தான் அவர் இதை பகிர்ந்துள்ளார். 

Blogger இயக்குவது.