விஜய் கண் அசைத்தால் இது நடக்கும் - நேர்கொண்ட பார்வை இயக்குனர் வினோத் வெளியிட்ட தகவல்


இயக்குனர் அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தற்போது தனது 63வது படத்தில் நடித்து வருகிறார்.‛சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று' வெற்றிப் படங்களை இயக்கிய பின், தமிழ் பட உலகில் தனக்கென ஒரு இடத்தை பிடித்திருக்கிறார் இயக்குநர் ஹெச்.வினோத். 

இப்போது, அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்த படம் நாளை ஆகஸ்ட் 8-ம் தேதி வெளியாகவுள்ளது.இந்நிலையில், போனிக் கபூர் தயாரிக்க, நடிகர் அஜித்தின் அடுத்தப் படத்தை இயக்கும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார் வினோத். விரைவில் அடுத்தப் படத்தின் படபிடிப்பும் துவங்க இருக்கிறது. 


நடிகர் அஜித்தை வைத்து இரு படங்கள் அடுத்தடுத்து இயக்குவது என்பது எனக்கான பெருமை. என் திறமைக்கு கொடுக்கப்பட்டிருக்கும் வெகுமதியாக கருதுகிறேன். அவரது அடுத்தப் படம், அதிரடி ஆக்ஷன் படமாக இருக்கும். அஜித்தின் தோற்றம் அஜித் ரசிகர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் வித்தியாசமாக காட்டப்படும்.


அஜித்தை அடுத்து விஜய்க்காகவும் ஒரு கதை தயார் செய்து வைத்திருக்கிறேன். கதை விஜய்க்குப் பிடித்து போய் இருப்பதால், அடுத்து அவருக்கே, நான் படம் இயக்கும் வாய்ப்பு இருக்கும் என நினைக்கிறேன். அவருடைய கண் அசைவுக்காக காத்திருக்கிறேன். அவர் கண் அசைத்தால் என்னுடைய அடுத்த படம் விஜய்யுடன் தான் என்று நம்பிக்கையுடன் கூறுகிறார் வினோத்.
Blogger இயக்குவது.