காதலிக்குறது ஒருத்தரை, கல்யாணம் பண்ணிகிறது ஒருத்தரையா..? - சிம்பு பட நடிகையை வெளுத்து வாங்கும் ரசிகர்கள்
நடிகர் சிம்புவிற்கு கட்டம் எப்படி இருக்கிறது என்று சொல்லி தெரிய வேண்டியதில்லை. ஆனால், அவருடன் நடித்த குத்து படத்தில் நடித்த நடிகை ரம்யாவிற்கு கட்டம் மிகவும் மோசமாக உள்ளது என்றே கூற வேண்டும்.
சினிமாவில் கொடிகட்டி பறந்த அந்த நடிகை பிரபல அரசியல்வாதியின் வாரிசு ஆவர். அதனை பயன்படுத்திக்கொண்டு காங்கிரஸ் கட்சி சார்பில் அரசியல் புகுந்து தேர்தலில் ஜெயித்து MP-யாகவும் ஆனார்.
ஆனால், ஒரு பயனும் இல்லை. தொடர்ந்து இரண்டாவது முறையாக பாஜக அரசே மீண்டும் மத்தியில் பொறுப்பெற்றது. கிட்டதட்ட, காங்கிரஸ் என்ற பெரிய இயக்கத்தின் சோலி முடிந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். காரணம், வலுவான தலைவர்கள் இல்லாதது தான்.
கடந்த தேர்தலில் பிரதமர் வேட்பாளர் யார் என்றே கூறாமல் தேர்தலை சந்தித்து மரண அடி வாங்கியது. ஆனால், தமிழகத்தில் மட்டும் நின்ற இடங்களில் எல்லாம் ஜெயித்தது.
இலங்கை தமிழர்களை கொத்து கொத்தாக கொன்று குவித்த இலங்கை அரசுக்கு தங்கு தடையின்றி ஆயுதம் சப்ளை செய்த கட்சி காங்கிரஸ் என்பதை மறந்துவிட்டு நாட்டிற்காக 21 மணி நேரம் கண் விழித்து உழைத்து 3 மணி நேரம் மட்டுமே உறங்கும் பிரதமர் மோடி அவர்களின் அருமை தெரியாமல் மாதம் 6000 ரூபாய் பணம் மற்றும் ஐந்து பவுன் நகைக்கடன் தள்ளுபடி என்றதும் காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணி கட்சிகளுக்கு வாக்குகளை அள்ளிக்கொட்டினார்கள் தமிழக மக்கள்.
இது மட்டும் காரணமல்ல, தினம் தினம் மோடி மீதான தவறான பிம்பத்தையே 95% ஊடகங்கள் பரப்பி வருகின்றன. அந்த ஊடகத்தை நிர்வகிக்கும் முதலாளிகள் எந்த கட்சி என்று தெரிந்தாலே போதும் இப்போது இருக்கும் மத்திய அரசு எந்த அளவுக்கு இந்தியாவை கட்டமைத்து கொண்டிருகின்றது என்று.
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி நின்ற இடங்களில் எல்லாம் வெற்றி பெற்றது நாட்டு நலனில் அக்கறை உள்ள தமிழகர்களின் மனதில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இப்படி தேசத்தை சேதம் செய்த காங்கிரஸ் கட்சியின் MP-யான நடிகை குத்து ரம்யா சமீபத்தில் போர்சுகல் நாட்டை சேர்ந்த ஒருவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருகிறார். தேர்தல் சமயத்தில் இந்தியாவை காதலிக்கிறேன் என்று ஓட்டு வாங்கிவிட்டு இப்போது போர்சுகல் நாட்டில் சென்று செட்டிலாக போகிறீர்கள். இது தான் உங்கள் தேசபக்தியா.? என்று வெளுத்து வாங்கி வருகிறார்கள்.