ஜோதிகாவின் அடுத்த படத்தில் ஹீரோ யாருன்னு தெரிஞ்சா ஷாக் ஆயிடுவேள்..!
நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட பின், பல ஆண்டுகளுக்கு சினிமா மீது பார்வையை படாமலேயே வைத்திருந்தார் நடிகை ஜோதிகா.
குழந்தை ஓரளவுக்கு வளர்ந்ததும், மீண்டும் சினிமா மீது ஆசை கொண்டார் ஜோதிகா. தன்னுடைய வயதுக்கும், திறமைக்கும் ஏற்றபடி அமையும் கதாபாத்திரங்களில் நடிப்பது என முடிவெடுத்து, வித்தியாசமான, சவாலான கேரக்டர்களில் நடித்து வருகிறார் ஜோதிகா.
கடந்த ஆண்டில், மூன்று படங்களில் நடித்த அவர், இந்த ஆண்டிலும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வருகிறார். கடந்த மாதத்தில், ஜோதிகா நடிப்பில் ராட்சசி படம் வெளியானது. இந்த மாதம் ஜாக்பாட் படம் வெளியாகி இருக்கிறது.
அடுத்து ஜீத்து ஜோசப் இயக்கும் படத்தில் கார்த்தி உடன் நடிக்கிறார். இந்நிலையில், புதுமுக இயக்குநர் ஜெ.ஜெ.ப்ரடரிக் இயக்கத்தில் உருவாகும் பொன்மகள் வந்தாள் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்திற்கு பிறகு கத்துக்குட்டி படத்தின் இயக்குநர் இரா.சரவணனின் புது படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருகிறார். இந்தப் படத்தில், நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி, கதாநாயகனாக நடிக்க அவருக்கு ஜோடியாக நடிகை ஜோதிகா நடிக்க இருப்பதாக தகவல் கசிந்துள்ளன.