மொரட்டு கலாய் - "கோமாளி" படத்தின் டீசர் செய்த பிரமாண்ட சாதனை..! - வேற லெவல்..!


அடங்க மறு படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இது அவரது 24-வது படமாக உருவாகியுள்ளது. இதில் முதன்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்துள்ளார் காஜல் அகர்வால். 

மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 


வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். 90-களில் கோமா-விற்கு செல்லும் நாயகன் 2016-ம் ஆண்டு மீண்டும் நினைவு திரும்புகிறார். அதன் பிறகு நிகழ்கால உலகில் அவர் அனுபவிக்கும் விஷயங்களை தான் "கோமாளி" படத்தில் பார்க்க போகிறோம். 


இந்த படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றது. அதிலும், ட்ரெய்லரின் இறுதியில், ஜெயம் ரவியிடம் யோகி பாபு "டே... நீ நிஜமாவே 16 வருஷம் கோமா-ல தான் இருந்த.. இப்போ 2016. வேணும்னா டீ.வி-ய பாரு என்று ஆன் செய்கிறார். அதில், நடிகர் ரஜினிகாந்த் நான் அரசியலுக்கு வருவது உறுதி என்கிறார். 

இதனை பார்த்த ஜெயம் ரவி ஹே.. இது நைன்டீன் சிக்சு.. யார ஏமாத்த பாக்குறீங்க.." என்று கேட்பதெல்லாம் வச்சு செய்தலில் வேற ரகமாக உள்ளது. இந்த ட்ரெய்லர் வெளிவந்த 14 மணி நேரங்களிலேயே 1.5 மில்லியன் பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. Youtube ல் டிரெண்டிங்கில் இரண்டாம் இடத்தில் உள்ளது.இதோ அந்த வீடியோ,
Blogger இயக்குவது.