வாங்க மோதி பாத்துருவோம் - பிகிலுடன் மோத தயாரான பிரபல நடிகரின் படம்.! - கலை கட்டும் தீபாவளி ரேஸ்..!


மாநகரம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகி வரும் கைதி படம் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 

மாநகரம் பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் கைதி. இந்தப் படத்தில் கார்த்திக்கு ஜோடி யாரும் கிடையாது. முக்கிய கதாபாத்திரத்தில் நரேன் நடித்துள்ளார். 


ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஒரு இரவில் நடக்கும் சம்பவத்தை ஆக்‌ஷன் திரில்லராக உருவாகியுள்ள கைதி படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. 


இந்நிலையில், கைதி படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி இப்படம் வருகிற தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது. ஏற்கனவே, தீபாவளிக்கு விஜய்-அட்லீ கூட்டணியில் உருவாகும் பிகில் படம் ரிலீசாக உள்ளது. 

தற்போது இப்படத்திற்கு போட்டியாக கைதி படமும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது. இதேபோல் விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படமும் தீபாவளிக்கு ரிலீசாக உள்ளது என படக்குழு வட்டாரங்களிடம் இருந்து நம்பதகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன. 


Powered by Blogger.