ப்ளாக் பஸ்டர் ஹிட் அடித்த ஸ்மார்ட் ஷங்கர் தமிழ் ரீமேக்கில் நடிக்கவுள்ள ஹீரோ யாரு தெரியுமா..?
சமீபத்தில் தெலுங்கில் பிரபல இயக்குனர் பூரி ஜெகன்நாத் டைரக்ஷனில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ஸ்மார்ட் சங்கர்.
மார்க்கெட் வேல்யூ அதுவும் இல்லாத, பக்கத்து வீட்டு பையன் போன்ற கதாபாத்திரங்களில் நடித்து வந்த ராம் பொத்தனேனி தான், இந்த படத்தின் கதாநாயகனாக நடித்திருந்தார்.
அவருக்கு இந்த படம் ஒரு மாஸ் ஹீரோ அந்தஸ்தை உருவாக்கித் தந்துள்ளது. இதுநாள் வரை இந்த படம் தயாரிப்பாளர் எதிர்பார்க்காத அளவு வசூலை குவித்து வருவதாக கோலிவுட் பாக்ஸ் ஆபிஸ் நிலவரங்கள் தெரிவிக்கின்றன.
ஏற்கனவே இந்த படத்தின் இந்தி மற்றும் தமிழ் ரீமேக் உரிமையை நல்ல விலைக்கு விற்கப்பட்டுள்ளது. இதுஒரு பக்கம் இருக்க இந்தப் படத்தின் தமிழ் ரீமேக்கில் தனுஷ் நடிக்க இருக்கிறார் என்று சொல்லப்டுகிறது.
இந்தப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை வாங்கி வைத்திருக்கும் தயாரிப்பாளரிடம் இதன் ரீமேக்கில் நடிக்க விருப்பம் தெரிவித்து அதுகுறித்து பேசி வருகிறாராம் நடிகர் தனுஷ்.
ஹா...ஹா...இஸ்மார்ட் ஷங்கர்..!