ரஜினி அரசியல் பிரவேஷம் குறித்து கலாய்த "கோமாளி" - நடிகர் கமல்ஹாசன் அதிரடி


ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள "கோமாளி" படத்தின் ட்ரெய்லர் காட்சி நேற்று மாலை வெளியாகி. ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுவரும் இந்த டீசரில் அடர்ந்து வளர்ந்த தாடி மீசை என்று கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும் கதையின் நாயகன் ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார். 


தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு “நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தேடா” என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிர வைக்கிறார். ஒருகட்டத்தில் கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. 


அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது. இந்தக் காட்சிக்கு ரஜினி ரசிகர்கள் மத்தியில் கடுமையான எதிர்ப்பு எழுந்தது. இதையடுத்து #நாளையதமிழகம் ரஜினி என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்டாக்கினர். 

மேலும், ரஜினியின் அரசியல் பிரவேசத்தை கலாய்ப்பது போல காட்சிகள் இருப்பது குறித்து ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், மக்கள் நீதி மய்யத்தின் பிரதிநிதி முரளி அப்பாஸ் என்ற ஒருவர் பகிர்ந்துள்ள பதிவில் "நம்மவர் அவர்கள் இன்று காலை கோமாளி ட்ரைலர் பார்த்தார் அதில் ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவதை பற்றிய விமர்சனத்தை பார்த்தவர் உடனே தயாரிப்பாளருக்கு போன் செய்து இதை என்னால் நகைச்சுவையாக பார்க்க முடியவில்லை என்று கூறி வருத்தப்பட்டார் . நட்பின் வெளிப்பாடா..? நியாயத்தின் குரலா..?" என கூறியுள்ளார்.
இதனால், கோமாளி படத்தின் டீசர் மீதான எதிர்ப்பு விஸ்வரூபம் பெற்றுள்ளது. ஆனால், இந்த படத்திற்கு ஒரு பக்கம் இலவச ப்ரோமோஷன் என்றும் எடுத்துக்கொள்ளலாம். 
Powered by Blogger.