குருவை மிஞ்சிய சிஷ்யன் - அட்லி பார்த்த வேலையால் கிறுகிறுக்கும் கோலிவுட்
தெறி, மெர்சல் படங்களைத் தொடர்ந்து விஜய் - அட்லீ கூட்டணியில் உருவாகியுள்ள படம் பிகில். பெண்கள் கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்தப் படத்தில் பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய்.
அவருக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ளார். இவர்களுடன் கதிர், இந்துஜா, யோகி பாபு, விவேக், ஜாக்கி ஷெராஃப் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ் என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் இந்தப் படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.
படத்தின் படப்பிடிப்பு துவங்குவதற்கு முன்பாகவே படம் தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஒருமுறை தீபாவளிக்கு படம் ரிலீஸ் ஆவதை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி உறுதி செய்துள்ளார்.
இயக்குனர் அட்லி பிரமாண்ட இயக்குனர் ஷங்கரின் சிஷ்யன் என்பது அனைவர்க்கும் தெரிந்த விஷயம். இந்நிலையில், படத்தின் உத்தேச பட்ஜெட்டை விட பல கோடி ரூபாய்களை அவுட்-டோர் படப்பிடிப்பில் எகிற வைத்துவிட்டார் இயக்குனர் அட்லி என்ற தகவல்கள் வந்துள்ளன.
மேலும், அவுட்-டோர் யூனிட் பில் மட்டும் ரூ 25 கோடி வந்துள்ளதாகவும், இதுவரை வேறு
எந்த படத்திற்கும் இப்படி ஒரு செலவு வந்தது இல்லை என கூறப்படுகின்றது.
பலரும் செலவு செய்வதில் அட்லீ அவருடைய குருநாதர் ஷங்கரையே மிஞ்சிவிட்டார்
என கிறுகிறுத்து கிடக்கிறது கோலிவுட்.