உடல் எடையை குறைத்து ஆளே மாறிப்போன நடிகை வரலக்ஷ்மி..! - வைரலாகும் புகைப்படம்..!


நடிகை வரலட்சுமி சரத்குமார் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் இவர் கதைக்கு முக்கியத்துவம் உள்ள திரைப்படத்தை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். 

அதுமட்டுமில்லாமல் நெகட்டிவ் கதாபாத்திரத்திலும் பல படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் இவர் நடித்துள்ள கன்னித்தீவு திரைப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டார்கள். 


இந்த போஸ்டர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று வைரல் ஆனது. மேலும் நடிகை வரலட்சுமி சரத்குமார் தனது அடுத்த படத்திற்காக உடல் எடையை அதிரடியாக குறைக்க இருக்கிறார். 


உடல் எடை அதிகரித்துள்ளதால் முன்பு போல நடனம் ஆட முடியவில்லை என்பதால் ஜிம்மில் கடுமையாக உடற்பயிற்சி செய்து வருகிறார். இந்நிலையில், கணிசமான உடல் எடையை குறைத்துள்ள அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் புகைப்படத்தோடு வெளியிட்டுள்ளார். 

Powered by Blogger.