ஒரு பக்கம் ஒல்லிகுச்சி நடிகை - மறுபக்கம் மொத் மொத் நடிகை - விஜய் சேதுபதியை பார்த்து கருகும் கோலிவுட்..!
நடிகர் விஜய் சேதுபதி பிரபல கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்கை வரலாறு படத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.
ஆனால், இலங்கை வீரரின் படத்தில் நடிக்க வேண்டாம் என்று தமிழ் உணர்வாளர்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று கொண்டு வேணாம் சாமி வம்பு என படத்தில் இருந்து விலகி சென்று விட்டார் விஜய்சேதுபதி.
இப்போது, "லாபம்" என்ற படத்தில் நடித்து வரும் இவருக்கு ஜோடியாக நடிகை ஸ்ருதி ஹாசன் நடித்து வருகிறார். விஜய் சேதுபதி - ஸ்ருதிஹாசன் என்பது ஒரு வித்யாசமான காம்பிநேஷனாகவே தெரிகின்றது.
இந்த நிலையில் விஜய் சேதுபதியின் அடுத்த படமும் ப்ரீ ப்ரொடக்ஷன் பணிகள் எல்லாம் முடிந்து படப்பிடிப்புக்கு தயார் நிலையில் உள்ளது. புதுமுக இயக்குநர் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் உருவாகும் இந்த படதிற்கு 'துக்ளக் தர்பார்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
டைட்டிலைப் பார்க்கும் போது அநேகமாக அரசியல் கதையாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள். மேலும், இந்த படத்தில் விஜய் சேதுபதிக்கு இரண்டு ஹீரோயின்கள். ஒன்று வட நாட்டை சேர்ந்த ஒல்லிக்குச்சி அழகியான நடிகை அதிதி ராவ் ஹைதாரி மற்றொருவர் மலையளத்தை சேர்ந்த மொத் மொத் அழகி மஞ்சிமா மோகன்.
இதுவும் வித்தியாசனமான காம்பிநேஷனாகவே தெரிகின்றது.இவருக்கு மட்டும் எப்படி என்று அடிவயிறு கருகும் வாசம் கோலிவுட்டில் வீசுகின்றது. பல் இருக்குறவர் பக்கோடா சாப்பிடுகிறார் உங்களுக்கு என்ன வந்துச்சி என்று அந்த கருகும் வாசனையை அனைக்கும் பேச்சுகளும் கேட்கின்றன.