மதுமிதா கத்தியால் கையை கிழித்து கொள்ள காரணமே நடிகர் கமல்ஹாசன் தான் - இதோ விபரம்..!


பிக்பாஸில் மதுமிதா வெளியேறியது போட்டியாளர்கள் உள்பட பலருக்கும் செம்ம ஷாக்கிங்காக உள்ளது. மதுமிதா வெளியேறியது மட்டுமல்லாமல் கையை அறுத்துகொண்டு தற்கொலைக்கும் முயற்சித்துள்ளார். 

இதற்கான காரணம், இப்போது தெரிய வந்துள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கி 50 நாட்களுக்கு மேல் ஆகியும் அந்த வீட்டில் நீச்சல் குளத்தில் தண்ணீர் நிரப்படமாலே உள்ளதை அனைவரும் அறிந்திருப்பீர்கள். 


தமிழ் நாட்டில் சொட்டு தண்ணீர் கூட இல்லை என்ற மாய பிம்பத்தை ஏற்படுத்த அரசியல் கட்சி நடந்த்தும் கமல்ஹாசன் ஏற்படுத்தினார். ஏன்,. என்று கேட்டால் அவருக்கே மட்டுமே புரியும் படி ஒரு பக்கத்திற்கு விளக்கம் கூட கொடுப்பார். அதெல்லாம், நமக்கு எதுக்கு. கோடி கோடியாக செலவு செய்து உருவாக்கப்பட்ட பிக்பாஸ் வீட்டில் 400 ரூபாய் கொடுத்து ஒரு லாரி தண்ணீர் வாங்கி நிரப்ப முடியாது..? ஆனால், திரும்பும் பக்கமெல்லாம் FROOTI மட்டும் பெட்டி பெட்டியாக இருக்கும். இதை பற்றி பேசினால் பேசிக்கொண்டே போகலாம். 


சரி, இந்த பிரச்னைக்கும் மதுமிதா கையை கிழித்து கொண்டதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா..? இருக்கு பாஸ். 

பிக்பாஸ் நீச்சல் குளத்தில்  தண்ணீர் நிரப்படாமல் இருப்பது குறித்து  இயக்குனர் சேரன் மழை பெய்தால் தான் நமக்கு தண்ணி கிடைக்கும் என்று கூறியுள்ளார். இதனை கேட்ட, மதுமிதா அந்த வருண பகவான் கூட கர்நாடகத்துகாரர் போல, அதனால் தான் தமிழ்நாட்டுக்கு தண்ணியே தரமாட்டேன் என்கிறார் என்று வெள்ளந்தியாக கூறியுள்ளார். 

இதனை கேட்டு விட்ட கர்நாடகாவை சேர்ந்த நடிகை ஷெரின் இதற்கு ஏன் எங்க ஊரை இழுக்குறீங்க. என்று வரிந்து கட்டி கொண்டு வந்துள்ளார். காவிரி தண்ணீர் பிரச்சனையில் மதுமிதாவிற்கும் ஷெரீனிற்கும் இடையே தான் முதலில் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது தான் காரணம் என்றாலும், மதுமிதா தற்கொலைக்கு முயற்சித்தது பாய்ஸ் கேங்க் எனப்படும் கவீன், சாண்டி, லொஸ்லியா, தர்ஷன், முகேன் ஆகியோரால் தானாம். 

குறிப்பாக கவீன் இதுதான் வாய்ப்பு என்று மதுமிதாவிடம் நேரடியாக வாக்குவாதத்தில் ஈடுப்பட்டுள்ளார். கவின், நடிகை ஷெரீனுக்கு ஆதரவாக நின்று கொண்டு, தமிழச்சி தமிழச்சி என்று சொல்லிகிட்டே இருக்க இல்ல, நீயே தமிழ்நாட்டிற்கு உயிரை கொடு என கூறியதோடு சில கெட்ட வார்த்தைகளை கூறி திட்டியாதாக  கூறுகிறார்கள்.

இதனால் மனமுடைந்த மதுமிதா அருகில் இருந்த கத்தியால் தனது கையை அறுத்துகொண்டுள்ளார். இதை பார்த்த கவீன் எதுவும் தெரியாதது போல் நகர்ந்து சென்றுள்ளார். 

இப்போ சொல்லுங்க, தமிழ் நாட்டில் தண்ணீரே இல்லை என்ற மாயபிம்பத்தை ஏற்படுத்தி நரி தந்திரமாக அரசியல் செய்து கொண்டிருக்கும் கமல்ஹாசன் தானே இந்த பிரச்னைக்கு அச்ச்சராமாக இருக்கிறார்...?
Blogger இயக்குவது.