"பிகில்" வசூலுக்கு "செக்" - களத்தில் இறங்கிய மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள்..!
இந்த வருடப் பொங்கலுக்கு பேட்ட, விஸ்வாசம் என இரு பெரிய படங்கள் வெளியாகி, இரண்டும் வசூலை அள்ளியதால் தீபாவளிக்கும் இதே நிலைமை தொடரவுள்ளது. அந்தச் சமயத்தில் பெரிய நடிகர்கள் நடித்த பல படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இயக்குனர் அட்லி எழுதி, இயக்கியுள்ள படமான "பிகில்"-ல் நடிகர் விஜய் கதாநாயகனாக நடித்து வருகிறார். ஜனவரி 19 அன்று பூஜை போடப்பட்ட இந்த படம் மெல்ல மெல்ல நகர்ந்து இப்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வருகின்றன. படம் ஆரம்பிக்கும் போதே, 2019 தீபாவளிக்கு வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பிகில் படத்துடன் போட்டியிட இன்றைய தேதியில் குறைந்த மூன்று படங்களாவது போட்டியில் இறங்கும் என நம்புகிறார்கள். தனுஷ் நடிக்கும் பட்டாஸ், கார்த்தி நடிக்கும் கைதி, விஷால் நடிக்கும் ஆக்ஷன் என இந்த மூன்று படங்களும் தீபாவளிக்கு வெளியாகும் என கூறுகிறார்கள்.
பொங்கலுக்கு வெளியான இரு படங்களுமே வசூலில் குறை வைக்காததால் இனி பெரிய நடிகர்களின் படங்கள் எத்தனை வந்தாலும் சவாலை சமாளிக்கமுடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
தீபாவளிக்கு பிகில் உள்ளிட்ட நான்குப் படங்களுமே வெளிவர வாய்ப்பில்லையென்றால் குறைந்தபட்சம் மூன்று படங்களாவது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.