கன்றாவி கன்றாவி - தலைவர் நடிகர் திருமணம் நின்று போனதற்கு இந்த நடிகை தான் காரணமாம்..!


தமிழில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் தலைவர் நடிகருக்கும், ஐதராபாத்தைச் சேர்ந்த பெண்ணுக்கும் குடும்பத்தினரால் திருமணம் நிச்சயயிக்கப்பட்டது. 

இருவரும் முன்பே பழகி கொஞ்சமாகக் காதலித்து பெரியவர்களிடம் சொல்லி திருமண நிச்சயம் வரை சென்றார்கள். தான் மணந்து கொள்ளப் போகும் பெண்ணிடம் தன்னுடைய முந்தைய காதல் பற்றியெல்லாம் உயர நடிகர் வெளிப்படையாக அனைத்தையும் உளறி கொட்டிவிட்டாராம். 


அவற்றை பெரிய மனதுடன் ஏற்றுக் கொண்டுள்ளார் கட்டிக்கப் போகும் பெண். ஆனால், ஆன்மிகம், ஜாதகம் ஆகியவற்றில் அதீத நம்பிக்கை கொண்ட பெண் வீட்டார் தங்களது குடும்ப ஜோதிடரிடம் இருவரின் ஜாதகத்தையும் காட்டி ஆலோசித்துள்ளனர். திருமணம் செய்யலாம். ஆனால், பின்னாலில் திருமண வாழ்வில் இன்னொரு பெண் காரணமாக பிரச்சனை வர வாய்ப்புள்ளது. விசாரித்து செய்யுங்கள் என்று கூறியுள்ளார். 


ஆனால், இதனை பெரிதாக நம்பாத பெண்களின் பெற்றோர்கள் சில நடிகர்கள் மீது பாலியல் தொந்தரவு குற்றச்சாட்டுகளை வைத்து பரபரப்பை ஏற்படுத்திய அந்த தெலுங்கு நடிகை இரண்டு மாதங்களுக்கு முன்பு மீண்டும் அந்த நடிகர் மீது குற்றச்சாட்டை வைத்திருந்தார். 


அது உண்மையா..? பின்னால், திருமண வாழ்கையை பாதிக்கும் வகையில் இருந்தால் என்ன செய்வது..? என்று உஷாரான பெண் வீட்டார் அந்த கேஸை தங்களுக்கு நெருங்கியவர்களிடம் கொடுத்து தோண்டி பார்க்க சொல்லியிருக்கிறார்கள். 

அதில் எதுவும் உண்மையாக இருக்க கூடாது என்று தான் மணப்பெண் வீட்டார் நம்பிக்கொண்டு காத்திருந்தார்கள். ஆனால், கிடைத்த சில நம்பதகுந்த குடும்ப நண்பர்களிடம் இருந்து வந்த அதிர்ச்சித் தகவல்கள் மற்றும் சில கன்றாவியான புகைப்பட ஆதாரங்கள் மணப்பெண் வீட்டாரின் அடிவயிற்றில் வெடி வைத்துள்ளது. 

இதனை பெண்ணிடம் எடுத்துக்கூறி திருமணம் வேண்டாம். இதனால், வரும் காலத்தில் நிச்சயமாக வம்பு வர வாய்புள்ளது. உன்னுடைய வாழ்க்கை தான் பாதிக்கும் என எடுத்துக்கூறியுள்ளனர். இதனால், திருமணம் வேண்டாம் என கனத்த இதயத்துடன் பின்வாங்கிவிட்டாராம். 

ஆனாலும், இரு வீட்டாரின் பெற்றோரும் இது குறித்து இன்னும் பேசி தான் வருகிறார்களாம். ஒருவேளை பெண் வீட்டார் மனம் மாறினால் திருமணம் நடக்கவும் வாய்ப்புள்ளது என்கிறார்கள்.

இந்த விவகாரம் கோலிவுட்டிலும், டோலிவுட்டிலும் புகைச்சலை கிழப்பியுள்ளது. இது, பற்றிய கிசுகிசுக்கள்தான் தற்போது அதிகமாக உள்ளன.
Blogger இயக்குவது.