அடுத்த படம் குறித்து அண்ணனிடம் விஜய் எப்போதும் கூறும் ஒரு விஷயம்..? - நடிகர் ஜெயம் ரவி வெளியிட்ட தகவல்


அடங்க மறு படத்துக்குப் பின், நடிகர் ஜெயம் ரவி நடிக்கும் படம் கோமாளி. ஆகஸ்ட் 15ல் வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இறுதிப் பணிகளில், நடிகர் ஜெயம் ரவியும் தீவிரமாக இருக்கிறார். 

இந்நிலையில், அவர் அளித்திருக்கும் பேட்டி ஒன்றில், நடிகர் விஜய் மற்றும் இயக்குநர் மோகன் ராஜா மீண்டும் இணைந்து உருவாக்கும் படம் குறித்து பேசியிருக்கிறார். அவர் கூறியிருப்பதாவது: நடிகர் விஜய், எல்லோருடனும் நன்கு பழகக் கூடியவர். 


அந்த வகையில், என்னுடைய அண்ணன் மோகன் ராஜாவுடனும் நல்ல நட்புடன் உள்ளார். இருவரும் நல்ல நண்பர்கள் என்பதால், இருவரும் அடிக்கடி போனில் பேசிக் கொள்வர். அப்போதெல்லாம், இருவரும் சேர்ந்து ஒரு படத்தைப் பண்ண வேண்டும் என்று பேசுவர். 


"நல்ல கதையை மட்டும் ரெடி பண்ணுங்க; சேர்ந்து பண்ணுவோம்" என்ற ஒரு விஷயத்தை நடிகர் விஜய் எப்போதும் அண்ணனிடம் கூறுவார். தற்போது, என் அண்ணன், விஜய்க்கு ஏற்ற ஒரு நல்ல கதையை உருவாக்கி இருக்கிறார். அதை விஜய்யிடமும் சொல்லி விட்டார். 

விரைவில், இருவரும் இணைந்து படம் பண்ணுவர். அப்படி எடுக்கப்படும் படம், தனி ஒருவன் 2க்குப் பின் தான் இருக்கும். இவ்வாறு ஜெயம் ரவி கூறியிருக்கிறார். இயக்குநர் மோகன் ராஜாவும், நடிகர் விஜய்யும் இணைந்து ஏற்கனவே வேலாயுதம் என்ற படத்துக்காக பணியாற்றி உள்ளனர்.
Powered by Blogger.