ஒட்டுமொத்த அஜித் ரசிகர்களுக்கும் தலைகுனிவை ஏற்படுத்திய திருச்சி ரசிகர்கள் - கைது செய்ய வலுக்கும் கோரிக்கை..!


நடிகர் அஜித்குமாரிற்கு இருக்கும் ரசிகர்கள் பட்டாளம் குறித்து சொல்லி தெரிய வேண்டியதில்லை. படங்கள் ரிலீஸ் ஆகும் போது, அஜித்தின் பிறந்தநாள், அவரது மனைவு ஷாலினி அஜித்குமாரின் பிறந்தநாள் என ஒவ்வொரு நாளிலும் பல நலத்திட்ட உதவிகளை செய்து வருகின்றனர்.

அதே சமயம், ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அஜித், விஜய் என ரசிகர்களின் சண்டையும் அவ்வபோது நடந்து வருகின்றது. இந்நிலையில், ஒட்டு மொத்த அஜித் ரசிகர்களுக்கு தலைகுனிவை ஏற்படுத்துவது போல சில ரசிகர்கள் செய்த காரியம் இணையத்தில் வைரலாக பரவி வருகின்றது. 


திருச்சியில் உள்ள சில அஜித் ரசிகர்கள் மாஸ் காட்டுகிறோம் என்று நினைத்துக்கொண்டு திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே ஆட்டோவில் ஃபுட் போர்டில் நின்ற படியும், இருசக்கர வாகனங்களில் நின்ற படியும் சாலையில் அழிச்சாட்டியம் செய்து பொது மக்களை அச்சுறுத்தும் வகையிலும், சாலை விதிகளை மீறியும் நடந்து கொண்டிருகிறார்கள். 


இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்துள்ள நிலையில், மாநிலத்தின் பிரதான பேருந்துநிலையத்தில் இப்படியான சம்பவத்தில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்து போலீஸ் விசாரணை நடத்த வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.





Powered by Blogger.