தன்னுடைய முதல் காதல் கதையை அவுத்து விட்ட லொஸ்லியா - விரக்தியான கவின்..!
இலங்கையை சேர்ந்த செய்தி வாசிப்பாளர் லொஸ்லியா என்பவர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் போட்டியலாராக கலந்து கொண்டு 60 நாட்களை கடந்துள்ளார்.
மேலும், 100 நாட்கள் வரை இவர் போட்டியில் நீடிப்பார் என்று கூறுகிறார்கள். அபிராமி கவின், ஷாக்சி கவின் என்பதை தாண்டி இப்போது லொஸ்லியா கவின் என்ற நிலையில் பிக்பாஸ் காதல் இருக்கிறது.
ஆனால், வீட்டிற்கு வெளியே தான் முடிவு செய்யணும் என திருமணம் செய்து கொள்ளும் ரேஞ்சுக்கு சென்றுள்ளது கவின் லொஸ்லியா காதல். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு இருவரும் திருமணம் செய்து கொண்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று பலரும் கூறுகிறார்கள்.
இந்நிலையில், நேற்றைய பிக்பாஸ் எபிசோடில் தன்னுடைய ஏழு வயதில் வந்த முதல் காதல் குறித்து கவினிடம் லொஸ்லியா கூறினார். இதனால், விரக்தியான கவினின் முகம் சுருங்கியது.
இதனை ரசித்தபடியே தனது காதல் கதையை தொடர்ந்தார் லொஸ்லியா. மேலும், லொஸ்லியா மீது திருமணம் ஆகி விவாகரத்தானவர் என்ற வதந்தியும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.