நடிகர் விஜய் சேதுபதி படத்தில் இணைந்த முன்னணி நடிகர் - சூப்பர் அப்டேட்
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி அடுத்தடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்தில் பிரபல நடிகர் இணைந்திருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.
விஜய் சேதுபதி நடிப்பில் தற்போது ‘சங்கத் தமிழன்’, கடைசி விவசாயி, லாபம், மாமனிதம் ஆகிய படங்கள் உருவாகி வருகிறது. மேலும் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரனின் வாழ்க்கை வரலாறு படத்திலும், துக்ளக் தர்பார் படத்திலும் நடிக்க இருக்கிறார்.
இதில் துக்ளக் தர்பார் படத்தை டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்குகிறார். வயகாம் 18 ஸ்டூடியோஸ் மற்றும் 7 ஸ்க்ரீன் ஸ்டூடியோ இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதியுடன் பிரபல நடிகர் பார்த்திபன் இணைந்து நடிப்பதாக தற்போது படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக அதிதி ராவ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே, விஜய் சேதுபதியின் நானும் ரௌடிதான் படத்தில் வில்லனாக நடித்திருந்தார் பார்த்திபன்.
விரைவில் இப்படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள், நடிகைகள் பட்டியலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக வெளியிட இருக்கிறார்கள்.