"நேர்கொண்ட பார்வை படம் அஜித்தின் அந்த படத்தை விட ஒரு ரூபாய் கூடுதலாக வசூலித்தாலும் இது நடந்துவிடும் " - வினோத் அதிரடி


தமிழ் சினிமாவில் கமர்ஷியல், கமர்ஷியல் என இயக்குனர், நடிகர்கள் என ஒரே குட்டையில் மீன் பிடித்து வந்தனர். ஆனால், சதுரங்க வேட்டை, தீரன் போன்ற வித்தியாசமான படங்கள் இயக்கி ஹிட்டும் கொடுத்தார் இயக்குனர் எச்.வினோத். 

இந்நிலையில், தற்போது நடிகர் அஜித் நடித்துள்ள நேர்கொண்ட பார்வை படத்தினை இயக்கியுள்ளார். மிகவும் சென்சிட்டிவ்வான இந்த கதையை கையில் எடுத்து ஆபாசம், அருவருப்பு இல்லாமல் இயக்கு ஹிட்டும் ஆக்கிவிட்டார் மனுஷன். 

+
மேலும், நடிகர் அஜித்தின் அடுத்த படத்தையும் வினோத் தான் இயக்குகிறார். இந்நிலையில், வினோத் அளித்துள்ள சமீபத்திய பேட்டியில் கூறியதாவது, முன்னணி ஹீரோக்கள் படங்கள் என்றால் அதிகம் பணம் புழங்கும் ஒரு இடம்.


பிரபல ஹீரோக்கள் படமென்றால் திரையரங்கு உரிமையாளர் முதல் கேண்டினில் சமோசா விற்பவர், பார்கிங் ஏரியாவை குத்தைககைக்கு எடுத்தவர் வரை பலருக்கும் வருமானம் வருகிறது. 

அதனால், டாப் ஹீரோக்கள் பலரும் கமர்ஷியல் கதையம்சம் கொண்ட படங்களை தான் தேர்வு செய்கின்றனர். ஆனால், நேர்கொண்ட பார்வை அந்த என்ன ஓட்டங்களை தகர்க்குமா..? என்பதை பொறுத்திருந்தான் பார்க்கவேண்டும். 

நேர்கொண்ட பார்வை படம் அஜித்தின் முந்தைய படமான விஸ்வாசம் படத்தை விட கூடுதலாக ஒரு ருபாய் அதிகம் வசூலித்தாலும் போதும் டாப் ஹீரோக்கள் இதுபோன்ற சமூக கருத்து உள்ள படங்களில் நடிக்க வேண்டும் என்று விரும்புவார்கள், தயாரிப்பாளர்களும் பயப்படாமல் முன்வருவார்கள்.

என்னதான் சமூக கருத்து உள்ள படங்கள் என்றாலும் ரசிகர்கள் அதனை விரும்புகிறார்கள் என்ற பேச்சு இருந்தாலும் மார்க்கெட் மற்றும் அந்த வகை படங்களின் வசூல்தானே அனைத்தையும் தீர்மானிக்கிறது" என அதிரடியாக கூறியுள்ளார் வினோத்.
Blogger இயக்குவது.