அஜித், விஜய் இல்லையென்றால் கூட பரவாயில்லை - இவருக்கு ஜோடியாக நடித்து விட வேண்டும் - 'பகல் நிலவு" ஷிவானி
சினிமாவில் நடித்து சீரியல் பக்கம் ஒதுங்கும் நடிகைகள் ஒரு பக்கம் என்றால் சீரியலில் பிரபலமாகி சினிமாவிற்கு வரும் நடிகைகள் ஒரு பக்கம் இருக்கத்தான் செய்கிறார்கள்.
அந்த வகையில் பிரியா பவானி ஷங்கர், வாணி போஜன் என பல சீரியல் நடிகைகள் சினிமாவிற்கு வந்துள்ளனர். அதன் தொடர்ச்சியாக சினிமாவிற்கு வரவுள்ள புதிய சீரியல் நடிகை ஷிவானி.
இவர் பகல் நிலவு என்ற தொலைகாட்சி தொடர் மூலம் பிரபலமானவர் ஆவர். சமீபத்திய பெட்டி ஒன்றில் பேசிய இவரிடம், சினிமாவில் யாருக்கு ஜோடியாக நடிக்க விருப்பம் என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதிலளித்த அவர், எனக்கு அஜித், விஜய் , சூர்யா என எல்லோரையும் பிடிக்கும். ஆனால், அஜித், விஜய் இல்லையென்றால் கூட பரவாயில்லை, நடிகர் அதர்வா-வுடன் ஒரு படத்தில் ஜோடியாக நடித்து விட வேண்டும் என்ற ஆசை உள்ளது என கூறியுள்ளார்.