நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் நின்று போன நடிகர் விஷாலின் திருமணம் - ரசிகர்கள் அதிர்ச்சி - என்ன காரணம்..?


பிரபல நடிகர் விஷால், அனிஷா என்ற பெண்ணை திருமணம் செய்துக் கொள்ளப் போவதாக வெளியான செய்தியைத் தொடர்ந்து இந்த வருடம் மார்ச் மாதம் இருவரின் நிச்சயதார்த்தமும் நடைபெற்றது.

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல தொழிலதிபர் விஜய் ரெட்டியின் மகளான அனிஷா, ‘அர்ஜூன்ரெட்டி’ படத்தில் நடித்திருந்தார். வரும் அக்டோபர் மாதம் 9ம் தேதி நடிகர் விஷாலுக்கும், நடிகை அனிஷாவிற்கும் திருமணம் நடைபெறுவதாக இருந்து. 


தற்போது, நிச்சயதார்த்தத்துடன் இந்த ஜோடிகளின் திருமணம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


மேலும், இதனை உறுதிபடுத்தும் வகையில் தன்னுடைய சமூக வலைதள பக்கங்களில் அப்லோட் செய்திருந்த விஷால் சம்பந்தமான அனைத்து புகைப்படங்களையும் அனிஷா நீக்கி விட்டார்.

இதற்கு என்ன காரணம்..? என்று நடிகர் விஷால் தான் விளக்கம் கொடுக்க வேண்டும்.
Blogger இயக்குவது.