ரஜினி அரசியல் பிரவேஷம் - வேற லெவலில் வச்சு செய்த "கோமாளி" ஜெயம் ரவி - இதோ டீசர் வீடியோ
நடிகர் ஜெயம் ரவி நடிப்பில் உருவாகியுள்ள "கோமாளி" திரைப்படத்தின் மீது எக்கசக்க எதிர்பார்ப்பு நிலவி வந்தது. இந்நிலையில், இந்த படத்தின் டீசர் வெளியாகி அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது என்று தான் சொல்ல வேண்டும்.
1996-ல் கோமாவிற்கு செல்லும் நாயகன் 16 வருடங்கள் கழித்து மீண்டும் நினைவு திரும்புகிறார். இப்போது, அவர் எதிர்நோக்கும் சவால்கள் என்ன..? அதனை எப்படி சமாளிக்கிறார் என்பது தான் கதை.
ட்ரெய்லரில் உள்ள விஷயங்களே செம்ம காமெடியாக இருக்கிறது. அதிலும், இறுதியில் நடிகர் யோகிபாபு டே நீ நெஜமாவே 16 வருஷம் கோமா-ல தான் டா இருந்த நீ வேணா பாரு என தொலைகாட்சியை ஆன் செய்கிறார்.
அதில் நடிகர் ரஜினிகாந்த் "நான் அரசியலுக்கு வருவது உறுதி" என்கிறார். இதனை கேட்ட ஹீரோ ஜெயம் ரவி... ஹே.. இது 1996... யார ஏமாத்த பாக்குறீங்க..? என்று கலாய்கிறார்.
வேறலெவலில் இருக்கும் அந்த டீசர் வீடியோ இதோ உங்களுக்காக,