ஆஹா..??! விட்டா ஜூலி மாதிரி ஆக்கி விட்ருவாங்க போலயே..? - உஷாரான ஷாக்சி விடுத்த எச்சரிக்கை..!
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஷாக்சி நடிகை அபிராமியுடன் மிகவும் இணக்கமான நட்பில் இருந்தார். தொடங்கிய முதல் நாளே எனக்கு கவின் மீது காதல் உள்ளது என ஷாக்சியிடம் கூறினார் அபிராமி.
ஆனாலும், நாட்கள் செல்ல செல்ல கவினை காதலிக்க தொடங்கினார் ஷாக்சி. இதனால் பிக்பாஸ் வீட்டில் இவரது செயல்கள் பெரிதும் விமர்சிக்கப்பட்டன. தனது தோழி ஒருவரை காதலிக்கிறேன் என்று கூறிய பின்பும் அதே நபருடன் நெருக்கம் காட்டுவது அபத்தம் என்று திட்டி தீர்த்தனர்.
சமூகவலைதளங்களில் அவரை "ஸ்நேக்-சி" மற்றும் "விஷ-சி" என பல பட்டப்பெயர் வைத்து நெட்டிசன்கள் அழைத்தனர். அவரை வைத்து பல மீம்ஸ்களும் வெளியானது. இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார் சாக்ஷி.
அதன் பிறகும் அவரைத் தொடர்ந்து பலர் கிண்டல் செய்து வருகின்றனர். அவர் என்ன பதிவு வெளியிட்டாலும், அதற்கு பதிலடி தரும் வகையில் ஏதாவது நெட்டிசன்கள் வெளியிட்டு வருகின்றனர்.
இதனால் முதல் சீசன் ஜூலி போல் ஆகிவிடுவோமோ..? என்ற பயம் சாக்ஷிக்கு வந்து விட்டது போல. அதன் தொடர்ச்சியாக தன்னை பற்றி கிண்டல் செய்பவர்களைப் பற்றி தனது சமூகவலைதளப் பக்கத்தில் கோபமாக ஒரு பதிவு வெளியிட்டுள்ளார் சாக்ஷி.
அதில் அவர், 'என்னுடைய டுவீட் என்னுடைய உரிமை! அமைதியாக உங்கள் வாழ்க்கையை பாருங்கள்! இது ஒரு ஜனநாயக நாடு, எனக்கு பேசும் உரிமை உள்ளது. கிண்டல்காரர்கள் என்னை பின்தொடர்வதை நிறுத்துங்கள். பயனுள்ள ஏதாவதை செய்யுங்கள். மேலும் தயவு செய்து உங்களுக்கு பிடித்தவர்களுக்கு போய் கோவில் கட்டுங்கள்' என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.