சார் நான் அப்படியே தான் எடுப்பேன் - எஸ்கேப் ஆகவிருந்த வினோத்-தை மடக்கிய அஜித் - வெளிவராத தகவல்..!


நடிகர் அஜித் நடிப்பில் இந்த வருடம் வெளியான இரண்டு படங்களும் ப்ளாக் பஸ்டர். முதல் படம் மகளின் பாசத்தை கருவாக கொண்ட விஸ்வாசம். இரண்டாவது, பெண்கள் சுதந்திரத்தில் உள்ள குறைகளை கருவாக கொண்ட "நேர்கொண்ட பார்வை". 

விஸ்வாசம் படப்பிடிப்பில் இருந்த அஜித் இயக்குனர் வினோத்தை அழைத்துள்ளார். நம்மிடம் கதை கேட்கத்தான் கூப்பிடுகிறார் என்று நினைத்து கொண்டு தன்னிடம் இருந்த ஒரு கதையை எடுத்துக்கொண்டு சென்றுள்ளார் வினோத். 


அந்த கதையை கூறியும் முடித்து விட்டார். ஆனால், அஜித் முதலில் பிங்க் படத்தை ரீமேக் பண்ணும். நீங்க தான் டைரக்ட் பண்றீங்க என்று கூறியுள்ளார் அஜித். திருதிருவென முழித்த வினோத். பண்ணலாம் சார், ஆனா நான் பிங்க் படத்தை அப்படியே தான் எடுப்பேன் அதில் மாற்றுவதற்கு எதுவும் இல்லை உங்களுக்கு ஒகே வா என்று கூறி எஸ்கேப் ஆக முயற்சி செய்துள்ளார். 


சரி வினோத் அப்படியே எடுங்க என்று கூறியுள்ளார். வேறு வழியே இல்லாமல் ஒப்புக்கொண்டுள்ளார் வினோத். அதன் பிறகு அஜித் கூறிய விஷயம் தான் வினோத்திற்கு அதிர்ச்சியை கொடுத்திருகிறது. இந்த படம் முடிஞ்சதும் உங்க கதையில அடுத்த படம் பண்றோம் என்று கூறியுள்ளார் அஜித். 

இதனை சற்றும் எதிர்பார்க்காத வினோத் மிகவும் மகிழ்ச்சியடைந்துள்ளார். பிறகு, பிங்க் படத்தின் கதையில் அஜித்திற்கு ஏற்றார் போல சில காட்சிகள் மற்றும் கமர்ஷியல் விஷயங்களை நேர்த்தியாக கோர்த்துவிட்டு படத்தை ஹிட்டும் ஆக்கிவிட்டார் வினோத். அடுத்த படம் வரும் ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்குகிறது.
Blogger இயக்குவது.