"மாநாடு" படத்தில் ஏற்பட்ட திடீர் திருப்பம் - ஷாக் ஆன தயாரிப்பாளர்..!


‘மாநாடு’ திரைப்படத்திலிருந்து நடிகர் சிம்பு நீக்கப்பட்டுள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. இயக்குனர் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவாக உள்ள ‘மாநாடு’ படத்தில் சிம்பு கதாநாயகனாக நடிப்பார் என தெரிவிக்கப்பட்டது. 

அதைத் தொடர்ந்து சிம்புவும் உடல் எடையைக் குறைக்க தீவிர முயற்‌சியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்பட்டது. கடந்த மாதம் மலேசியாவில் தொடங்க இருந்த படப்பிடிப்பு, சில காரணங்களால் இதுவரை தொடங்கப்படவில்லை.


இந்நிலையில்‌ சிம்புவை இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என அறிவிப்பு வெளியானது. படத்திலிருந்து சிம்பு நீக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு பதிலாக நடிகர் தனுஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டு படம் உருவாக்கப்படவுள்ளது என தகவல்கள் பரவியது.


இந்நிலையில் திடீர் திருப்பமாக நடிகர் சிம்பு தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி-யை தொடர்பு கொண்டு மீண்டும் படத்தில் நடிக்க விருப்பம் தெரிவிதுள்ளாராம். இந்த திடீர் திருப்பத்தால் சுரேஷ் கமாட்சி ஆச்சர்யப்பட்டு போனாராம்.

மேலும், தாமதமின்றி மிக விரைவில் மீண்டும் சிம்பு நடிக்க “மாநாடு" படம் தொடங்கப்படலாம் எனத் தெரிகிறது. இந்த தகவல் பரவியதால் சினிமா உலகம் பரபரப்பாகியுள்ளது.

இந்த விஷயத்தில் அதிகாரப்பூர்வமான அறிவிப்பை தயாரிப்பு தரப்பு அறிவித்தால் மட்டுமே தெரியும். எனினும் சிம்பு ரசிகர்கள் இந்தச் செய்தியை மகிழ்ச்சியுடன் பரப்பி வருகிறார்கள்.
Blogger இயக்குவது.