கவினை வெளுத்து வாங்கிய ஷாக்சி - கிழிந்த பிக்பாஸ்-ன் முகத்திரை - வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!


சீரியல் நடிகர் கவின் மற்றும் மாடலும், நடிகையுமான ஷாக்சி ஆகியோர் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள். அவர்கள் என்ன காரணத்திற்காக இந்த போட்டியில் கலந்து கொண்டார்கள் என்று தெரியவில்லை. 

ஆனால், இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்தார்கள் என்பது மட்டும் தெளிவாக தெரிந்தது. ஒரு கட்டத்தில் பிரிந்தும் விட்டார்கள். ஆனால், ஒரு கட்டத்தில் இருவருக்கும் பிரச்சனை ஏற்பட்டு பிரிந்து விட்டார்கள். இப்போது, இலங்கை பெண் லாஸ்லியா-வும் குலாவி வருகிறார் கவின். 


இந்நிலையில், இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியேற்றப்பட்ட சாக்சி அகர்வால் சமீபத்தில் ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில் பேசிய அவர், ஒரு நாள் ஷெரினிடம் கவின் பேசிக்கொண்டிருக்கும் போது " மச்சான் நீ.. ஷாக்சி-யை பார்க்க வேண்டும் என்றால் என் வீட்டில் வந்து தான் பார்க்க வேண்டும். அவ என் வீட்டில் தான் இருக்க போகிறார்" என்று கூறினார். 


மேலும், திருமணம் செய்து கொள்வதை பற்றியெல்லாம் பேசினார். பிக்பாஸ் வீட்டில் என்னிடம் நிறைய முறை கத்தியிருக்கிறார். ஆனால், அவற்றை எதையும் விஜய் தொலைகாட்சி ஒளிபரப்பவில்லை என்று பகிரங்கமாக கூறியுள்ளார். 

ஆனால், அந்த வீடியோ அப்லோட் செய்யப்பட்ட சில மணி நேரத்திலேயே அதனை டெலிட் செய்து விட்டார் ஷாக்சி. விஜய் தொலைகாட்சியின் அறிவுரையின் பேரில் தான் ஷாக்சி அந்த வீடியோவை நீக்கியிருக்க வேண்டும் என்று கூறுகிறார்கள் ரசிகர்கள்.

ஆனால், நாங்கள் விடுவோமா..? டவுன்லோடு செய்து வைத்துள்ளோம். இதோ அந்த வீடியோ,
Blogger இயக்குவது.