போதும் போதும் லிஸ்ட் பெருஸ்ஸ்சா போயிகிட்டு இருக்கு..! - சிம்பு தவற விட்ட படங்கள் பட்டியல்..!


தமிழ் சினிமாவில் பல சர்ச்சைகளை சந்தித்த நடிகர் சிம்பு. இவர் அளவிற்கு வேறு எந்த ஒரு நடிகரும் பிரச்சனைகளை சந்தித்து இருப்பார்களா? என்றால் கேள்விக்குறி தான். 

இந்நிலையில் சிம்பு சமீப காலமாக பல படங்களை தவறவிட்டு வருகின்றார். படப்பிடிப்பிற்கு சரியான நேரத்தில் வருவதில்லை. கதையில் மூக்கை நுழைத்து அதை மாற்றுங்கள், இதை மாற்றுங்கள் என கூறுகிறார் என பல குற்றச்சாட்டுகள் பொதுவாக இவர் மீது வைக்கப்படுகின்றன. 


சரி அவர் தவறவிட்ட படங்கள் என்னென்ன என்பதை பார்ப்போம். ஜீவா நடிப்பில் பிரமாண்ட ஹிட் அடித்த கோ படத்தில் முதலில் நடிக்கவிருந்தது சிம்பு தான், அதே போல் ஆர்யா, மாதவன் நடிப்பில் வெளியான வேட்டை படத்தில் ஆர்யா நடித்த கதாபாத்திரத்தில் இவர் தான் முதலில் நடிக்கவிருந்தது. 


இது மட்டுமின்றி தற்போது உருவாகி வரும் சங்கத்தமிழன், மாஃபியா ஆகிய படங்களிலும் முதலில் சிம்பு தான் நடிக்கவிருந்தார். மேலும், எடுப்பதாக கூறி நின்றது AC, வேட்டை மன்னன், கெட்டவன், வாலிபன், மன்மதன்2, AAA இரண்டாம் பாகம் தற்போது வெங்கட்பிரபுவின் மாநாடு வரை லிஸ்ட் போய்க்கொண்டே இருகின்றது. 

ஒரு வாய்ப்பு கிடைத்து விடாதா..? என்று கோடம்பாக்கத்தில் அழைந்து திரிந்து பாதி வாழ்கையை தொலைத்தவர் ஒரு பக்கம். தொலைத்துக்கொண்டிருப்பவர்கள் ஒரு பக்கம் இருக்கும் நிலையில் இவரை போன்ற நடிகர்கள் கைக்கு வரும் பட வாய்ப்புகளை தவற விட்டு வருகிறார்கள்.
Powered by Blogger.