படப்பிடிப்பு தளத்தில் அஜித் அடிக்கடி கூறும் ஒரு விஷயம் இது தான்..!


பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர் நேர்கொண்ட பார்வை படம் பார்த்த அபிராமி, அஜித் ரசிகர்களின் அன்புக்கு நன்றி தெரிவித்துள்ளார். நேர்கொண்ட பார்வை படத்தில் ஃபமிதா பானு என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை அபிராமி. 

பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்ட இவர், கடந்த வாரம் வெளியேற்றப்பட்டார். பின்னர் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். 


வெளியே வந்ததும் தான் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தை திரையரங்கில் ரசிகர்களுடன் கண்டுகளித்தார் அபிராமி. நேர்கொண்ட பார்வை படத்துக்கு அஜித் ரசிகர்கள் கொடுத்த வரவேற்பை தெரிந்து கொண்ட அபிராமி தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.


மேலும், பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு சமீபத்தில் இவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித்துடன் நடித்த அனுபவத்தை பற்றி பகிர்ந்து கொண்டார். அதில், குறிப்பிடும் படியாக, படப்பிடிப்பு தளத்தில் நடிகர் அஜித் எப்போதும்அவரது மகள் அனோஷ்கா-வின் பெயரை உச்சரித்துக்கொண்டே இருப்பார். அந்த அளவுக்கு மகள் மீது பாசம் வைத்துள்ளார் அஜித் என்றுகூறியுள்ளார் அபிராமி.
Blogger இயக்குவது.