இதுக்காகவே உங்களை வெளியேற்றனும் - கஸ்தூரியை கலாய்க்கும் நெட்டிசன்கள் - இதோ மீம் குவியல்
பிக் பாஸ் 3 வீட்டில் இருக்கும் கஸ்தூரியை பார்த்து பார்வையாளர்களே பரிதாபப்படுகிறார்கள்.நடிகை கஸ்தூரி சினிமா, நாட்டு நடப்பு குறித்து ட்விட்டரில் வெட்டு ஒன்று துண்டு இரண்டாக பேசுவார்.
அதை பார்த்தவர்கள் கஸ்தூரி பிக் பாஸ் வீட்டிற்கு சென்றால் செமயாக இருக்கும் என்றார்கள்.குழந்தைகளுக்காக பிக் பாஸ் பக்கம் திரும்பாத கஸ்தூரி இந்த சீசனில் 17வது போட்டியாளராக கலந்து கொண்டுள்ளார்.
பிக் பாஸ் வீட்டிற்குள் கஸ்தூரியை பார்த்த பார்வையாளர்கள் இருக்கு இனி செம என்டர்டெயின்மென்ட் இருக்கு என்று மகிழ்ச்சி அடைந்தார்கள். ஆனால் சக போட்டியாளர்கள் கஸ்தூரியை கண்டமேனிக்கு கலாய்க்கிறார்கள். பட்டு, பட்டுன்னு பேசும் கஸ்தூரிக்கு பிக் பாஸ் வீட்டில் என்ன ஆனது என்றே தெரியவில்லை.
அவர் படும் பாட்டை பார்த்து பார்வையாளர்கள் தான் பரிதாபப்படுகிறார்கள்.வெளியில் டிவிட்டாரில் சிங்கம் மாதிரி இருந்த உங்கள பிக்பாஸ் வீட்டுக்குள் விட்டு அசிங்கப்படுதிட்டாங்களே மேடம் என்று கதறி வருகிறார்கள் கஸ்தூரியின் தீவிர ரசிகர்கள்.
இந்நிலையில், நேற்று "லவ் பேர்ட்ஸ் லவ் பேர்ட்ஸ் " பாடலை கேமராவிற்கு முன்பு பாடிய நடிகை கஸ்தூரியை "இதுக்காகவே உங்களை வெளியேற்ற வேண்டும்" என கலாய்த்து தள்ளி வருகிறார்கள் பிக்பாஸ் ரசிகர்கள். இதோ மீம் குவியல்,