"நேர்கொண்ட பார்வை" படத்தை பார்க்க சென்று இந்த குடும்பத்தினர் செய்த கலவரத்தை பாத்தீங்களா..?


அஜித் நடிப்பில் கடந்த 8-ம் தேதி வெளியான படம் நேர்கொண்ட பார்வை. இப்படம் ரசிகர்கள், விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் வேட்டை நடத்தி வருகிறது. 

தமிழகம் மட்டுமல்லாது கேரளா, கர்நாடகம், வெளிநாடுகளிலும் நல்ல வசூலை ஈட்டி வருகிறது. சென்னையில் மட்டும் முதல் 5 நாட்களில் இப்படம் 6.50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


மேலும் இப்படம் முதல் வார இறுதியில் வெளிநாட்டில் மட்டும் 2 மில்லியன் அமெரிக்க டாலர் வசூலித்ததாக படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். இந்திய மதிப்புபடி 14 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளது. 


அதிகப்படியான பெண்கள் மற்றும் குடும்பத்தினரின் பாராட்டுகளை பெற்றுள்ள இந்த படத்திற்கு சென்ற சென்னை பல்லாவரத்தை சேர்ந்த ஒரு குடும்பத்தினரிடம் டிக்கெட் பரிசோகதர் சீட் நம்பர் என்ன என்று கேட்டுள்ளார். அவர்களும் E வரிசை என்று கூறியுள்ளனர். E வரிசைனு சொன்னா எப்படி..?  சீட் நம்பர் சொல்லுங்க என்ற கேட்ட டிக்கெட் பரிசோதகரிடம் E வரிசை முழுதும் நாங்க தான் யா..! என்று செய்த கலவரமான கலாய்ச்சலை தங்களது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளனர்.

இதோ அந்த புகைப்படம்.


Blogger இயக்குவது.