உடல் எடை குறைத்து பழைய பன்னீர் செல்வமாக மாறிய நடிகர் விஜய் சேதுபதி..!


தமிழ் சினிமாவில் இப்படியும் ஒரு நடிகர் வளர முடியும் என வளர்ந்து காட்டியவர் நடிகர் விஜய் சேதுபதி. சினிமாவில் நுழைந்த ஆரம்ப காலகட்டத்தில், பத்தோடு பதினொன்றாக நடிக்கும் கதாபாத்திரங்களாக ஹீரோவுக்கு பின்னால் இருக்கும் நண்பர்கள், வில்லனுக்கு பின்னால் இருக்கும் அடியாள் போன்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர். 


குறும்படங்களில் ஹீரோவாக தலைகாட்டி வந்தார். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இவர் நடித்த பீட்சா திரைப்படம் இவருக்கும் பெரிய திருப்புமுனையை கொடுத்தது. தொடர்ந்து, நடுவுல கொஞ்சம் பக்கத்தை காணோம், சூது கவ்வும், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா என திருப்பு திருப்பு என திருப்பினர் விஜய் சேதுபதி. 


வருஷத்துக்கு ஐந்து படம் அதுவும் ஹீரோவாக. அசுர வேக வளர்ச்சி. அதே வேகத்தில் உடல் எடையும் அதிகரித்து கொண்டே வந்த இவருடைய சமீபத்திய படங்களான சீதக்காதி, சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் என எதுவும் சரியாக போகவில்லை.

இந்நிலையில், உடல் எடை குறைத்து பழைய பன்னீர் செல்வமாக திரும்பி வந்துள்ளார் மக்கள் செல்வன். இதோ அவருடைய லேட்டஸ்ட் புகைப்படம்...


Powered by Blogger.