மாநாடு படம் ட்ராப் - சிம்பு குறித்து முதன் முறையாக பேசிய வெங்கட்பிரபு..!


தமிழகத்தின் சர்ச்சை நாயகன் என்றால் அனைவரின் மனதில் தோன்றுவது சிம்புவின் பெயர் தான். நயனுடன் காதல், அனிருத்துடன் பாடல், இயக்குநரிடம் மோதல், மட்டுமல்லாமல் சொன்ன நேரத்திற்கு ஷூட்டிங் வராமல் இருப்பது, பல படங்களில் ஒப்பந்தமாகி பின்பு தயாரிப்பாளர்களுக்கு கல்தா கொடுப்பது என்று தொடர்ச்சியாக சர்ச்சையில் சிக்கி வருகிறார் சிம்பு.

இவருக்கு இருந்த பெரிய ரசிகர் வட்டம் இப்போது சுருங்கி விட்டது என்பதுtதான் உண்மை. காரணம், "நீங்க இல்லாம நான் இல்ல" என்று கூறுவதோடு சரி படங்களை சரியான நேரத்திற்கு ரிலீஸ் செய்வதில்லை. 


இவர் படம் நாளை தொடங்குகிறது என்றால் கூட அப்படியா..? அப்போ,. இன்னிக்கு நைட்டே ட்ராப் ஆகிடும் என்று சொல்லிவிட்டு ஒரு ரியாக்ஷனும் கொடுக்காமல் ரசிகர்கள் கடந்து சென்று விடுவார்கள் போல இருக்கிறது. அந்த அளவுக்கு மிக மோசமான நிலையில் இருந்து வருகிறார் நடிகர் சிம்பு. 


அவ்வபோது ஏதாவது ஒரு சர்ச்சையில் சிக்கி மீடியாவில் புகுந்து விடுகிறார். இதனால் தான் இவரை பலரும் இன்னும் நினைவில் வைத்து வருகிறார்கள் என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.

இந்நிலையில், இவர் நடிப்பதாக இருந்து ட்ராப் ஆன "மாநாடு" படத்தின் இயக்குனர் வெங்கட் பிரபு சமீபத்தில் ஒரு பேட்டியில் பேசும் போது "சிம்பு எனக்கு நண்பர் தான், அதற்காக ஒரு தயாரிப்பாளரின் பணம் வீனாவதை ஓர் இயக்குனராக நான் விரும்ப மாட்டேன். 

மேலும், சிம்பு, தானே இயக்கி நடிக்கும் படத்திற்கு மாநாடு என்பதை "மகா மாநாடு" என மாற்றி வைத்தது எனக்கு கொஞ்சம் வருத்தம் தான்"என்று கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.