விஷால் - அனிதா திருமணம் நின்ற விவகாரம் உண்மையா..? -இதோ பதில்


தமிழில் முன்னணி நடிகர், தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயலாளராக இருந்த விஷால், நடிகர் சங்கத்தின் கட்டிடம் முடித்த பிறகுதான் திருமணம் செய்துக்கொள்ளப் போவதாக தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில், கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஹைதராபாத்தைச் சேர்ந்த அனிஷா அல்லா ரெட்டி என்பவருடன் அவருக்கு திருமணம் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தெலுங்குப் படங்களில் துணை நடிகையான அனிஷா அல்லா ரெட்டியை பார்த்ததும் காதலில் விழுந்துவிட்டதாக தெரிவித்தார் நடிகர் விஷால். 


ஆந்திர தொழிலதிபரின் மகள் அனிஷாவை திருமணம் செய்ய இருந்தார் விஷால். அமெரிக்காவில் பட்டப்படிப்பு முடித்துள்ள அனிஷா, விஜய் தேவரகொண்டா நடித்த அர்ஜுன் ரெட்டி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றார். 


விஷாலும், அனிஷாவும் ஒருவரையொருவர் பாராட்டி சமூக வலைதளங்களில் போஸ்ட் போட்டிருந்தார்கள். அவர்களின் திருமணம் அக்டோபர் மாதம் நடக்கும் என்று நிச்சயிக்கப்பட்டது. 

ஆனால் தற்போது இரண்டு பக்கமும் திருமண வேலையை துவங்க ஆர்வம் காட்டவில்லை என்று சொல்லப் படுகிறது. இதனால் திருமணம் நின்று போனதாக கோலிவுட் வட்டாரத்தில் செய்திகள் பரவி வந்தன. 

இது உண்மை தானா..? என பலரும் குழம்பி வந்த நிலையில் நடிகர் விஷால் தரப்பிற்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது அது உண்மை தான் என கூறியுள்ளனர்.
Blogger இயக்குவது.