பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகுகிறார் கமல்ஹாசன் - புதிய தொகுப்பாளர் யாரென்று தெரிஞ்சா தூக்கி வாரிப்போட்ரும்..!


பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து கமல் விலக இருப்பதாகவும், அவருக்குப் பதில் அடுத்த சீசனை இளம் நடிகர் ஒருவர் தொகுத்து வழங்க இருப்பதாகவும் ஒரு தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு கமலும் ஒரு முக்கியக் காரணம் என்று சொன்னால் மறுக்க முடியாது. காரணம் அவருக்காகவே இப்போதும் நிகழ்ச்சியைப் பார்க்கும் மக்கள் அதிகம். 


ஆனால், கடந்த சீசன்களில் இருந்து வேறுபட்டு இம்முறை அதிக சர்ச்சைகளில் பிக்பாஸ் நிகழ்ச்சி சிக்கி வருகிறது. இதனால், அந்நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்களுக்கும், கமலுக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. 


மேலும், இதனால் தனது அரசியல் வாழ்கை பெரிய அளவில் அடி வாங்குகிறது என்பதை உணர்ந்துள்ளார் கமல். பிக்பாஸ் நிகழ்சியை வைத்து இவர் செய்யும் அரசியல் அப்பட்டமான மூளைச்சலவை என்பதை பெரும்பான்மையான மக்கள் உணர்ந்து விட்டார்கள். 

அதன் தொடர்ச்சியாக இந்த சீசனை மட்டும் தொகுத்து வழங்கி விட்டு கமல் வெளியேற திட்டமிட்டிருப்பதாக இணையத்தில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதோடு, அடுத்த சீசனை நடிகர் சிம்புவை வைத்து தொகுத்து வழங்க முடிவு செய்திருப்பதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது. இந்தத் தகவலால் கமல் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
Powered by Blogger.