"நேர்கொண்ட பார்வை" நாலு நாள் தான் ஓடியது - பிரபல ரஜினி பட இயக்குனர் விளாசல்..!


தமிழ் சினிமாவுக்கு பெரிய சிக்கலாக இருப்பது வீடியோ திருட்டு என ஒரு கருத்து இருந்தாலும், தயாரிப்பாளர்களின் நஷ்டத்திற்கு மக்கள் தியேட்டர் பக்கம் வர யோசிப்பதும் ஒரு காரணம் என பேசியுள்ளார் பிரபல இயக்குனர்.

ஆர்.வி.உதயகுமார். மேலும் பேசிய அவர், "மக்கள் தியேட்டர் வரவேண்டும் என்றால் யார் நடித்திருக்கிறார்கள், என்ன இருக்கிறது என பார்த்து தான் வருகிறார்கள். 


ஆனால், தற்போது  உள்ள டாப் ஹீரோக்களின் படங்களுக்கே சில நேரங்களில் கூட்டம் வருவதில்லை. அஜித்தின் நேர்கொண்ட பார்வை படத்திற்கே நான்கு நாள் தான் ஓடியது. படம் பிடித்தால் தான் ஓடும்" என விளாசியுள்ளார்.


உண்மை என்னவென்றால் நேர்கொண்ட பார்வை 20 நாட்கள் கடந்தும் 300+ அரங்குகளில் ஓடிவரும் நிலையில் இவர் ஏன் இப்படி சொன்னார் என்று தெரியவில்லை.

ஆர்.வி.உதயகுமார் நடிகர் ரஜினின் எஜமான் உள்ளிட்ட பல ஹிட் படங்களை இயக்கிய பழம்பெரும் இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Blogger இயக்குவது.