ரஜினியை கலாய்த்த கோமாளி பட விவகாரம் - நடிகர் ராகவா லாரன்ஸ் கூறியதை பாருங்க..!


அடங்க மறு படத்தை அடுத்து அறிமுக இயக்குநர் பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம் ரவி நடித்துள்ள படம் கோமாளி. இது அவரது 24-வது படமாக உருவாகியுள்ளது. இதில் முதன்முறையாக ஜெயம் ரவிக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார் . 

மற்றொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடித்துள்ளார். இவர்களுடன் யோகி பாபு, கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு ஹிப் ஹாப் தமிழா இசையமைத்துள்ளார். 

ஆகஸ்ட் 15-ம் தேதி திரைக்கு வர இருக்கும் இந்தப் படத்தின் ட்ரெய்லர் சமீபத்தில் வெளியானது. அதில், அடர்ந்து வளர்ந்த தாடி மீசை என்று கரடுமுரடான தோற்றத்தில் இருக்கும் ஜெயம் ரவி மருத்துவமனையில் கண் விழிக்கிறார். தன் தோற்றத்தைப் பார்த்து அதிர்ச்சியடையும் ஜெயம் ரவியிடம், யோகி பாபு “நீ ஜஸ்ட் 16 வருஷமா கோமாவில இருந்தேடா” என்று கூறி அதிர்ச்சியில் இருக்கும் அவரை இன்னும் அதிர வைக்கிறார். 


ஒருகட்டத்தில் கோமாவிலிருந்து எழுந்து 16 வருடங்கள் கடந்துவிட்டதை நம்பாத ஜெயம் ரவிக்கு டிவியில் “நான் அரசியலுக்கு வருவது உறுதி” என்று ரஜினிகாந்த் கூறும் வீடியோவைப் போட்டுக்காட்டுகிறார் யோகி பாபு. அதைப்பார்த்து ஜெயம் ரவி பதற்றத்துடன் “ஏய், இது 96. யாரை ஏமாத்துறீங்க” என்று கேட்பதாக ட்ரெய்லர் முடிவடைகிறது.


அப்படி இந்த காட்சியில் என்ன குறை கண்டார்களோ தெரியவில்லை. நடிகர் கமல்ஹாசன் உள்ளிட்ட பல பிரபலங்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பு தெரிவித்தவர்கள் எல்லாம் யாரென்று பார்த்தால், பல்வேறு பட்ட பிரச்னைகளில் படத்தை படமாக பார்க்க வேண்டும். 

அதனை பொது வாழ்வோடு ஒப்பிட்டு பார்க்க கூடாது. படம் ஒரு பொழுது போக்கு நிகழ்ச்சி. அதில் சொல்லப்படுவது குறித்து நாம் பெரிதாக கவலை கொள்ள தேவையில்லை என்று கூறிய நடிகர்கள். ஆனால், இப்போது இதனை படமாக பார்க்க முடியவில்லை. என்று கிளம்பி விட்டார்கள். 

இதனால், அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்குகிறோம் என படத்தின் தயாரிப்பாளரே முன் வந்து கூறிவிட்டார். இந்நிலையில், இந்த பட்டியலில் புதிதாக இணைந்திருப்பவர் நடிகர் ராகவா லாரன்ஸ். ரஜினியின் தீவிர ரசிகரான ராகவா லாரன்ஸ் எம்.ஜி.ஆர் பட பாடல் வரிகைகளை குறிப்பிட்டு தனது ஆதரவை வெளிப்படுத்தியுள்ளார்.
Powered by Blogger.