மதுமிதா கையை அறுத்துக்கொண்ட போது ஏன் அவரை யாரும் தடுக்கவில்லை - அபிராமியின் அடேங்கப்பா பதில்
பிரபல காமெடி நடிகை ஜாங்கிரி மதுமிதா பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மக்களிடம் பெரிதும் கெட்ட பெயர் வாங்காமல் 50 நாளை கடந்தார் அவர்.
ஆனால், 50வது நாள் ஒரு தீயசக்தி பிக்பாஸ் வீட்டுக்குள் விருந்தாளி என்ற பெயரில் உள்ளே புகுந்து மீண்டும் போட்டியாளராக மாறியது. மக்களால் வெளியேற்றப்பட்ட ஒருவர் மீண்டும் அதே போட்டியில் எப்படி கலந்து கொள்ள முடியும். 100 நாட்கள் வெளியே என்ன நடக்கிறது..? இப்போது என்ன நேரம்..? இன்று என்ன தேதி..? என்ற எந்த விதமான வெளியுலக தொடர்பும் இல்லாதது தான் பிக்பாஸ் நிகழ்ச்சியின் சுவாரஸ்யமே..!
தமிழ் பிக்பாஸ் நிகழ்ச்சி அதற்கெல்லாம் விதி விலக்கு. பிறந்தநாள் கொண்டாட்டம். இப்போது என்ன நேரம். இன்று இது தான் தேதி என போட்டியாளர்கள் அனைவர்க்கும் தெரிந்திருக்கின்றது. மேலும், வெளியே சென்று அனைத்தையும் பார்த்து விட்டு மீண்டும் பிக்பாஸ் போட்டியில் கலந்து கொள்வதெல்லாம் வேற லெவல்.
இந்நிலையில், நடிகை மதுமிதா வீட்டில் எழுந்த ஒரு பிரச்சனை காரணமாக தனது கையை அறுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால், பிக்பாஸ் வீட்டில் இருந்து அவர் வெளியே அனுப்பப்பட்டார். தொடர்ந்து, அடுத்த நாளே நடிகை அபிராமி மக்களால் வெளியே அனுப்பப்பட்டார்.
சமீபத்தில், பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அவரிடம் ஏன் தற்கொலைக்கு முயன்ற மதுமிதா-வை யாரும் தடுக்கவில்லை என்று கேட்டனர். அதற்கு அவர் அளித்த அடேங்கப்பா பதிலாவது, " மதுமிதா அப்படி செய்து கொண்டதை யாரும் பார்க்கவே இல்லை. எல்லாமே நடந்து முடிந்த போது யாரால் என்ன செய்ய முடியும்." என்று கூலாக கூறியுள்ளார்.