"நேர்கொண்ட பார்வை" ஓட்டம் முடிந்தது - HIT-ஆ..? BLOCK BUSTER-ஆ..? - இதோ இறுதி முடிவு..!
பாலிவுட்டில் சூப்பர் ஹிட் ஆன ‘பிங்க்’ படத்தின் ரீமேக் ஆக ‘நேர்கொண்ட பார்வை’ தமிழில் உருவானது. இதனை ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தை இயக்கிய வினோத் இயக்கினார். ‘பிங்க்’ படத்தில் அமிதாப் பச்சன் நடித்த கதாபாத்திரத்தில் அஜித் குமார் நடித்துள்ளார்.
பெண் உரிமையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படம் கடந்த 8ம் தேதி உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. நான்கு நாட்களாக திரையரங்குகளில் கூட்டம் நிரம்பியது.
‘நேர்கொண்ட பார்வை’ திரைப்படம் வெளியான முதல் இரண்டு நாட்களிலேயே தமிழகத்தில் மட்டும் ரூ.30 கோடி வசூல் செய்துள்ளதாக அப்படத்தின் தமிழக விநியோகஸ்தர் ராகுல் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் நேர்கொண்ட பார்வை திரைப்படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் படத்தின் வெளிநாட்டு வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.
இந்த படத்தின் ஓட்டம் கிட்ட தட்ட முடிந்து விட்டது.மல்டிஃப்லக்ஸ் மற்றும் 50-க்கும் குறைவான அரங்குகளில் இன்னும் ஓடிக்கொண்டிருகின்றது. இந்நிலையில், இந்த படத்தின் முடிவு குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன.
மாஸ் ஹீரோ என்ற வட்டத்தை விட்டு வெளியே வந்து தன்னை ஒரு நடிகனாக அடையாளப்படுத்திக்கொண்டார் அஜித் என்பதை இந்த இடத்தில அழுத்தமாக பதிவு செய்யவேண்டியது அவசியம். அஜித் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்து விட கூடாது என்பதற்காக மட்டுமே ப்ரீ இன்டர்வெல்லில் ஒரு சண்டை காட்சியை புகுத்தினார் இயக்குனர் வினோத்.
அந்த சண்டை காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மாஸ் ரெஸ்பான்ஸ் கிடைத்தது. இந்நிலையில், இந்த படம் "HIT" என்ற நிலையிலேயே தன் ஓடத்தை நிறைவு செய்துள்ளது. எந்த ஒரு மாஸ் எலமென்ட்டும் இல்லாமல், கமர்ஷியல் ஃபார்முலா-வை உடைத்து எரிந்து விட்டு பெண் சுதந்திரம் பற்றி பேசிய இந்த படம் தமிழ் ரசிகர்களுக்கு பிடிக்குமா..? கூறப்படும் கருத்துக்களை ஏற்றுக்கொள்வார்களா..? என்ற ஐயம் இருந்த இடத்தில் "HIT" என்ற நிலைக்கு இந்த படம் வந்ததே மிகப்பெரிய வெற்றி தான். திரையிட்ட அனைத்து இடங்களிலும் நல்ல வசூல் மற்றும் ஷேர் கொடுத்துள்ளது.
ஆனால்,"BLOCK BUSTER" என்ற நிலையை எதிர்பார்த்திருந்த அஜித் ரசிகர்களுக்கு "HIT" என்ற நிலையிலேயே நின்று கொண்டு டாடா காட்டிய நேர்கொண்ட பார்வை படத்தினால் கொஞ்சம் வருத்தம் இருக்கலாம்.