இந்திய அளவில் Top 5 லிஸ்டில் முதலிடத்தில் "அஜித்" - காணமல் போன "விஜய்" - மாஸ் காட்டும் அஜித் ரசிகர்கள்..!
தமிழ் சினிமா ரசிகர்களை ஒட்டுமொத்தமாக இரண்டு வகையாக பிரிக்கலாம் அதில் ஒன்று அஜித் ரசிகர்கள் மற்றொன்று விஜய் ரசிகர்கள். இவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி கேலி செய்து அடித்துக்கொள்வார்கள்.
அதே சமயம் அவர்களது நாயகனின் திரைப்படம் குறித்த அப்டேட்கள் மற்றும் பாடல்கள், டீசர், ட்ரெய்லர் ரிலீசாகும் சமயங்களில் கொண்டாடி மகிழ்வார்கள். இது காலம் காலமாக நடந்து வரும் நடைமுறை. மேலும், சமூகவலைத்தளங்கள் மற்றும் யூ-ட்யூப் ஆகியவற்றில் புது புது சாதனைகள் செய்து அழகு பார்பார்கள்.
அந்த வகையில் இப்போது, அஜித் ரசிகர்கள் 2019-ம் வருடத்தின் முதல் பாதியில் இந்திய அளவில் ஒரு சாதனையை படைத்துள்ளனர். #Viswasam என்ற டேக் தான் இந்த வருடத்தின் முதல் பாதியில் அதிகம் ட்வீட்டுகளை பெற்ற ஹேஸ் டேக் என்று ட்விட்டர் நிறுவனம் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும்,விஜய் சம்பந்தமான எந்த டேக்கும் முதல் ஐந்து இடத்தில் இல்லை என்பது அதிர்ச்சியளிக்க கூடியதாக உள்ளது. இதற்க்கான காரணம், இந்த வருடம் விஜய் படம் எதுவும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. கடந்த தீபாவளிக்கு சர்கார் ரிலீஸ் ஆனதோடு சரி.
அடுத்த வரும் தீபாவளிக்கு தான் படம் ரிலீஸ் ஆகவுள்ளது. இதன் காரணமாகவே, விஜய் குறித்த டேக் முதல் ஐந்து இடத்தில் வரவில்லை. இல்லையென்றால் நிச்சயம் இடம் பிடித்திருக்கும்.