10 கோடி ரூபாயை திருப்பி தருவாரா கமல்ஹாசன்..! - தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் - இதெல்லாம் நடக்குற காரியமா..?


தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் பெயரைச் சொன்னாலே அவரை வைத்து படம் தயாரித்த இயக்குனர்கள் அரசல் புரசலாக நெகட்டிவ்வாகத்தான் பேசுவார்கள். காரணம், தன் படங்களில் கடவுள் மறுப்பு கொள்கையை பேசுகிறேன் என்று இந்துக்களை இழிவு படுத்தும் வகையில் எதையாவது பேசி விடுவார் அல்லது ஜாடை பேசுவது போல சந்தடி சாக்கில் ஒரு காட்சியாவது இருக்கும் படி பார்த்துக்கொள்வார் கமல்ஹாசன். 

நான் கிருஸ்துவ கலை மற்றும் தொடர்பு துறையில் இணைந்து மதத்தை பரப்பினேன் அதன் பிறகு தான் சினிமாவில் இணைந்தேன் என்று பகிரங்கமாக பேசியுள்ளார். ஆனால், அதனை எந்த தமிழக ஊடகமும் பெரிது படுத்தி பேசவே இல்லை. இதன் காரணமாக தான் நடிப்பு திறமை இருந்து ரஜினிகாந்த் போல ஒரு மாஸ் நடிகராக கமல்ஹாசனால் உயரமுடியவில்லை. 

வெறுமனே உலக நாயகன் என தம்பட்டம் அடித்துக்கொண்டிருக்கலாம், பத்மஸ்ரீவிருது பெற்றவர் என புகழ் பாடிக்கொண்டிருக்கலாம். ஆனால், இந்துக்களையும் இந்து மதத்தையும் நேரடியாக எதிர்க்கும் ஒரு ஆள் தான் கமல்ஹாசன்.

மைக்கேல் மதன காமராஜன் படத்தில் ஐயர் சமூகத்தை தேர்ந்தவர்கள் புகையிலையை வாயில் அடக்கிக்கொண்டு சமையல் செய்வது போலவும், அக்குளை சொரிந்து கொண்டு சமளையல் செய்வது போலவும் ஒரு காட்சியை இருக்கும். பிராமணர்கள் புகையிலை போன்ற போதை வஸ்துகளை பயன்படுத்துவது கிடையாது மேலும் சுகாதரத்தை பேணுபவர்கள். ஆனால், அப்படி ஒரு பிம்பத்தை ஏற்படுத்த கமல்ஹாசன் முயற்சி செய்திருப்பார்.இன்னும் பற்பல படங்களில் கமல்ஹாசன் தன்னுடைய இந்து மத எதிர்ப்பை காட்டியிருப்பார்.



அந்தப் பிரச்சினைகளுக்காகவே கமல்ஹாசனை வைத்து பலரும் படம் எடுக்க முன் வருவதில்லை. இதனால், சொந்தப் படங்களைத் தயாரித்து நடித்துக் கொள்வார். ஒரு இடைவெளிக்குப் பிறகு அவர் வெளியில் நடிக்க ஆரம்பித்த படமான 'சபாஷ் நாயுடு, இந்தியன் 2 ஆகிய படங்கள் பிரச்சினைகளில் சிக்கியதும் சமீபத்திய வரலாறு. 

கமல்ஹாசன் நடித்து 2015ல் வெளிவந்த 'உத்தம வில்லன்' படம் நிதிப் பிரச்சினை காரணமாக வெளியீட்டுச் சிக்கலில் சிக்கியது. அப்போது கமல்ஹாசனுக்கு 10 கோடி ரூபாய் கொடுத்து உதவியிருக்கிறார் பிரபல தயாரிப்பாளர் கே.ஈ.ஞானவேல்ராஜா. 

பின்னர் ஒரு படம் நடித்து கொடுப்பதாக அவர் தெரிவித்த காரணத்தால் அந்தப் பணத்தைக் கொடுத்திருக்கிறார் ஞானவேல். ஆனால், பின்னர் படமும் நடித்துக் கொடுக்கவில்லை, பணத்தையும் திரும்பத் தரவில்லை என தயாரிப்பாளர் சங்கத்தில் இப்போது புகார் கொடுத்துள்ளார். 

இது பற்றி விரைவில் விசாரிக்கப்படும் என தயாரிப்பாளர் சங்கம் தரப்பில் தெரிவித்துள்ளார்கள். ஆனால், இதெல்லாம் நடக்குற காரியமா..? என கூறுகிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
Blogger இயக்குவது.