தன்னை பற்றி தீயாக பரவிய வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த நடிகை தமன்னா..!


நடிகை தமன்னா நடிப்பில் உருவாகி உள்ள பெட்ரோமாக்ஸ் படம் வரும் 11-ந்தேதி வெளியாக உள்ளது. விஷால் ஜோடியாக ஆக்‌‌ஷன் படத்தில் நடித்து வருகிறார். 

சிரஞ்சீவியின் சைரா நரசிம்மா ரெட்டி படத்திலும் நடித்துள்ளார். மேலும் 2 படங்களில் நடிக்க அவர் கதை கேட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்நிலையில், 29 வயதாகும் இவருக்கு விரைவில் திருமணம் நடக்கவுள்ளது எனவும் மும்பையை சேர்ந்த பிரபல கோடீஸ்வர தொழிலதிபரின் மகன் தான் மாப்பிள்ளை என்றும் செய்தி பரவியது. 

இது குறித்து தமன்னாவிடம் கேட்டபோது, நடிப்பிலிருந்து நான் ஒதுங்கிவிடவில்லை. ஆனால், என்னை பற்றி வேண்டுமென்றே சிலர் தேவையில்லாத வதந்திகளை கிளப்புகிறார்கள். 

திருமணம் செய்துகொள்ளும் மனநிலைக்கு நான் இன்னும் வரவில்லை. என்னை பற்றி வரும் திருமண செய்தி வெறும் வதந்திதான். எனக்கு திருமணம் என்றால் நானே கூறுவேன்eஎன்று அதிரடியாக கூறியுள்ளார் தமன்னா.
Powered by Blogger.