பிகில் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் பேசியது குறித்து கமல்ஹாசன் கூறியதை கேட்டீங்களா..??


நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள "பிகில்" படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்று முடிந்தது. வழக்கம் போல இந்த மேடையிலும் நடிகர் விஜய் அரசியல் சார்ந்த வசனங்களை பேசி ரசிகர்களை கவர்ந்தார். 


அவர் பேசியதில் முக்கியமாக கவனிக்கப்பட்டது பேனர் விழுந்து உயிரிழந்த சுபஸ்ரீ விவகாரம். இது ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. அவர் பேசியதாவது, " பேனரால் இறந்த சுபஸ்ரீ குடும்பத்துக்கு என்னோட ஆறுதல். சுபஸ்ரீ விவகாரத்தில் லாரி டிரைவர் மற்றும் பேனர் அச்சடித்தவர்கள் மீதும் வழக்கு போடுகிறார்கள். 

இதுபோன்ற சமூக பிரச்சனைக்கு ஹாஷ் டாக் போடுங்க. சமூக பிரச்சனைல கவனம் செலுத்துங்க." என்று கூறினார். இது ரசிகர்கள் மத்தியில் விவாத பொருளாக மாறியதை தொடர்ந்து நடிகர் கமல்ஹாசனிடம் இது குறித்து கேட்கப்பட்டது. 


இது குறித்து கமல் பேசியதாவது, தம்பி விஜய் ஒரு பெரிய மேடையை பொதுநலனிற்காக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். அவருக்கு என்னுடைய பாராட்டுக்கள். என்னுடைய முழு ஆதரவு தம்பி விஜய்க்கு உண்டு. என்று கூறியுள்ளார்.
Blogger இயக்குவது.