ரெஸ்ட் எடுக்க போன விஜய் - அட்லி வைத்த ட்விஸ்ட் - என்ன நடக்குது பிகிலில்..?
விஜய் நடிப்பில் உருவாகியுள்ள பிகில் படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்தது. நிகழ்ச்சி முடிந்த கையேடு கடந்த 20-ம் தேதி லண்டன் சென்றுவிட்டார் விஜய்.
அவர் விமான நிலையத்தில் முகத்தை மூடிக் கொண்டு சென்ற புகைப்படங்கள் வெளியாகி வைரலானது.லண்டன் சென்றுள்ள விஜய் அங்கு 10 நாட்கள் ஓய்வு எடுத்துவிட்டு தனது அடுத்த படமான தளபதி 64 படத்தில் நடிக்கவிருந்தார்.
லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ள தளபதி 64 படத்தின் ஷூட்டிங் அக்டோபர் மாதம் முதல் துவங்கவுள்ளது. நிலைமை இப்படி சுமுகமாக போய்க்கொண்டிருக்க, விஜய்யை தொலைபேசியில் தொடர்பு கொண்ட அட்லி அண்ணா இன்னும் கொஞ்ச சீன்-லாம் ரீ-சூட் பன்னலாம்-னு இருக்கேன். கெளம்பி வந்துடுங்க என்று கூறியுள்ளார்.
படத்தின் ஷூட்டிங் முடிந்து எடிட்டிங், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் நடந்து வரும் நிலையில் இப்போது மீண்டும் பிகில் படக்குழுவினர் கேமராவை கையில் தூக்கியுள்ளனர்.
அதில், குறிப்பிடதக்க விஷயம். நடிகர் விஜய்யின் அறிமுக காட்சியை இரண்டாயிரம் துணை நடிகர்களுடன் ஷூட் செய்யவுள்ளனர். எனவே, அறிமுக காட்சி மிகப்பெரிய கூடத்தின் நடுவே விஜய் தோன்றுவது போலவே இருக்கும் என எதிர்பார்க்கலாம்.
ஏற்கனவே, மெர்சல் படத்தில் 500-க்கும் மேற்பட்ட துணை நடிகர்களுக்கு நடுவே விஜய்யை கைது செய்து அழைத்து செல்லும் காட்சி இடம் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.